Onetamil News Logo

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் வழக்கறிஞரின் தம்பி குத்தியும் வெட்டியும்  படுகொலை செய்யப்பட்டார் ;பரபரப்பு வீடியோ இணைப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் வழக்கறிஞரின் தம்பி குத்தியும் வெட்டியும்  படுகொலை செய்யப்பட்டார் ;பரபரப்பு வீடியோ இணைப்பு 



தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 21 ; தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் வழக்கறிஞரின் தம்பி குத்தியும் வெட்டியும்  படுகொலை செய்யப்பட்டார்.இதில் வழக்கறிஞர் தப்பி ஒட்டம் , கும்பலாக வந்து வெறிச் செயலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி சோரீஸ்புரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தனது தம்பி சிவா என்ற சிவக்குமார் (41) ,என்பவருடன் வழக்கு விஷயமாக இறுதித்தீர்ப்புக்காக இன்று நீதிமன்றம்,வந்துகொண்டிருந்தார்.அவர்  நீதிமன்றம் அருகில் உள்ள தெற்கு காவல் நிலையம் அமைந்திருக்கும் சாலையில் வந்து கொண்டிருந்த போது பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்தது இந்த வெறிச்செயலிலிருந்து  வழக்கறிஞர் தப்பி ஒட்டம் பிடித்தார்.
இதில் சிவா என்ற சிவக்குமாரை சுற்றிவளைத்து கத்தியால் குத்தியும் வெட்டியும் கொலை செய்தனர்.இதில் இறந்த சிவா என்ற சிவக்குமார் (வயது 41 ) பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவராவார்.இவர் கடந்த 2005ஆம் ஆண்டு தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் ஆத்திபழம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று தனது அண்ணன் வழக்கறிஞர் முத்துகுமாருடன் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு   சென்றபோது கொலை செய்யப்பட்டார்.
சட்டப் படிப்பு படித்தவரும் சிவா என்ற சிவக்குமார் (வயது 41 ) பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளதால் வழக்கறிஞராக பதிவு செய்ய முடியாது என்பதால் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆகையால்  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,இவர் தூத்துக்குடி ,திருநெல்வேலி போன்ற இடத்தில மாறி,மாறி இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார்.என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி எஸ்.பி.அருண் பாலகோபாலன், டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.தப்பி ஓடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo