Onetamil News Logo

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் விண்ணப்பம் செய்து, அங்கீகாரம் பெறப்பட வேண்டிய மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் பட்டியல் ;விண்ணப்பிக்க உத்தரவு 

Onetamil News
 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் விண்ணப்பம் செய்து, அங்கீகாரம் பெறப்பட வேண்டிய மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் பட்டியல் ;விண்ணப்பிக்க உத்தரவு 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 13 ; தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதியானது 28 மார்ச் 2016 அன்று அறிவிக்கப்பட்டது. 
அரசு மருத்துவமனைகள். தனியார் மருத்துவமனைகள், புறநோயாளிகளின் பிரிவுகள், கால்நடை மருத்துவமனைகள், விலங்கினங்களின் சோதனைக் கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், இரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா ஹோமியோபதி மருத்துவமனைகள், ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், இரத்த தான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள் தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஆகியவற்றுக்கு இவ்விதி பொருந்தும். 
விதி 10ன் கீழ், மருத்துவ கழிவுகளை கையாளும் மேற்குறிப்பிட்ட அனைத்து மருத்துவ நிறுவனங்களும், படிவம் - ஐஐ ல் மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்து, படிவம் ஐஐஐ ல் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். அத்தகைய அங்கீகாரத்தின் காலாவதியின் தேதியானது மாசு கட்டுப்பாடு வாரியத்தால் வழங்கப்படும் இசைவாணையுடன் ஓத்திசைவு செய்யப்பட்டு வழங்கப்படும். 
தமிழ்நாட்டில் உள்ள மேற் கூறிய அனைத்து நிறுவனங்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்hடு வாரியத்தின் நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு விதிகளின் கீழ் இசைவாணையை, மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகாரத்தினையும் உடனடியாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். 
படுக்கை வசதி இல்லாத மருத்துவ நிறுவனங்கள் தாமதமின்றி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் 2016 ன் கீழ் காலாவதியில்லாத அங்கீகாரத்தினையும் பெற வேண்டும். 
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதன்மை பெஞ்ச், புதுடெல்லி 15.07.2019 தேதியிட்ட உத்தரவில், மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை இணங்க தவறியவர்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையை விதிக்க உத்தரவிட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo