Onetamil News Logo

கோடை விடுமுறையை முன்னிட்டு திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

Onetamil News
 

கோடை விடுமுறையை முன்னிட்டு திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 25 ; கோடை விடுமுறையை முன்னிட்டு திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி  வழியாக வேளாங்கண்ணிக்கு  சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக ரயில்வே அதிகாரிகளுக்கும் ரயில்வே அமைச்சருக்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,
திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களின் புனித இடமான வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு இந்த மாவட்ட பகுதியிலிருந்து அதிகபடியான பக்தர்கள்  வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க தினசரி செல்கின்றனர். மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. வேளாங்கண்ணிக்கு செல்ல இங்கிருந்து ஏதாவது ஒரு ரயிலில் திருச்சி சென்றுவிட்டு அங்கிருந்து நாகப்பட்டிணம் செல்லும் ரயிலில் செல்லாம் என்றாலும் கூட போதிய இணைப்பு ரயில்கள் இல்லாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதனால் வேளாங்கண்ணிக்கு செல்லும் பயணிகள் பேருந்துகளிலும் தனியாக வாடகைக்கு வேன்கள் பிடித்தும் பேருந்துகளிலும் பயணம் செய்கின்றனர்.  
கோடை விடுமுறையை முன்னிட்டு திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவித்து இருமார்க்கங்களிலும் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் படியாக காலஅட்டவணை அமைத்து குழித்துறை, இரணியல், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி,  வள்ளியூர், நான்குநேரி ரயில் நிலையங்களில் நின்று செல்லதக்க வகையில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படடள்ளது. இந்த மார்க்கத்தில் ரயில் இயக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் செல்லும் பயணிகள் மற்றும் மாவட்டத்திலிருந்து அந்த இடங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் மிகவும் பயனள்ளதாக அமையும்.

திருச்சிக்கு ரயில்:-
குமரி மற்றும் நெல்லை மாவட்டத்திலிருந்து தற்போது திருச்சி வழியாக செல்லும் ரயில்கள் எல்லாம் நடுஇரவு நேரங்களில் தான் செல்லுமாறு கால அட்டவணை அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால் திருச்சிக்கு பயணிகளுக்கு வசதியாக நேரத்தில் செல்ல எந்த ஒரு இரவு நேர ரயிலும் தற்போது இல்லை. கொச்சுவேலியிருந்து நாகர்கோவில், திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில் அறிவிக்கப்பட்டால் இந்த ரயில் திருச்சிக்கு அதிகாலை 4 மணிக்கு செல்லுமாறு காலஅட்டவணை அமைக்கப்படும். இவ்வாறு இயக்கப்பட்டால் தென்மாவட்டங்களிலிருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகளுக்கு நல்ல முறையிவ் ஓர் ரயில் வசதி கிடைக்கும்.
வேளாங்கண்ணி கோவில் நிதி:-
 நாகப்பட்டிணத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரயில்பாதை அமைத்து வேளாங்கண்ணியில் புதிய ரயில் நிலையம் கட்டுவதற்கு வேளாங்கண்ணி கோவில் சார்பாக ஒரு கோடி ருபாய் ரயில்வேத்துறைக்கு அளிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் வேளாங்கண்ணிக்கு  புதிய ரயில்கள் இயக்குவதில் ரயில்வேத்துறை தொடர்ந்து மறுத்து வருகிறது. தற்போது வேளாங்கண்ணிக்கு இரண்டு பயணிகள் ரயிலும் ஒரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலும், ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. வேளாங்கண்ணிக்கு செல்லும் தென்மாவட்ட பயணிகள் பயன்படும் விதத்தில் கொச்சுவேலியிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் அறிவித்து இயக்க வேண்டும்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo