Onetamil News Logo

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆதார் சேவை செய்யாத ஊழியர் ;கனரா வங்கியில் உடனடி பதிவு ஏற்பு 

Onetamil News
 

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆதார் சேவை செய்யாத ஊழியர் ;கனரா வங்கியில் உடனடி பதிவு ஏற்பு  


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 14 ;தூத்துக்குடி பழைய நகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மைய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?   என்று பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள். 
தூத்துக்குடி பழைய நகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டு வரும்  ஆதார் சேவை மைய ஊழியர்  இன்று காலை 10 மணிக்கு அலுவலகத்தை திறந்து தன்னுடைய வருகையை பதிவு செய்து விட்டு,  இன்று இங்கு 12 மணி வரை சேவை கிடையாது தேவைப்படுவோர் பீச் ரோட்டில் உள்ள கனரா வங்கியில் செயல்படும் ஆதார் சேவை மையம் சென்று விடுங்கள் என்று சொல்லி விட்டு ஆபீசை பூட்டி விட்டு சென்று விட்டார். 
 இதனால் பள்ளி மாணவர்கள் வாசலில் காத்து கிடந்தனர். மேலும் இந்த பெண் ஊழியர் இந்த சேவை மையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதில்லை,மேலும் பள்ளி மாணவ மாணவிகளை  அலைகழிப்பதே இவரின் வேலை. எனவே இந்த பெண் ஊழியர்  மீது நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இந்த நிலையில் பழைய நகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மைய ஊழியர் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை வாங்காமல் அவற்றை அலைக்கழித்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் அங்கு வரும் மனுக்களை  திருப்பிய மனுக்களை கொண்டு கனரா வங்கிக்கு சென்றால் அங்கு ஆதார் பதிவு செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo