Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வுகளை 24,068 மாணவர்கள்  தேர்வு எழுதுகின்றனர் ;மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வுகளை 24,068 மாணவர்கள்  தேர்வு எழுதுகின்றனர் ;மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு 


தூத்துக்குடி 2019 மார்ச் 14 ;தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு நடைபெறும் மையங்களில்  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,   ஆய்வு செய்தார். தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் 14.03.2019 முதல் 29.03.2019 வரை 07 நாட்கள் நடைபெறுகிறது. மாவட்டத்தில் 102 தேர்வு மையங்களில் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 10,953 மாணவர்கள், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 7,422 மாணவர்கள், திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 5693 மாணவர்கள் என மொத்தம் 24,068 மாணவர்கள்  தேர்வு எழுதுகின்றனர். இதில் 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 
தேர்வு மையங்களில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் அலுவலர்கள்; முன் கூட்டியே ஆய்வு செய்து குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வினை காண்காணிக்க 106 முதன்மை கண்காணிப்பாளர்கள், 205 பறக்கும் படை அலுவலர்கள், 1,341 அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்  ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு நடைபெறும்  மையங்களில் தேர்வினை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.  ஆய்வின்போது  முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo