Onetamil News Logo

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சென்னையில் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுனப் போராட்டம்

Onetamil News
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சென்னையில் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுனப் போராட்டம்


சென்னை  2018 ஏப்.8 ; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுனப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நண்பகல் 1 மணிக்கு முடிந்தது.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி, பார்த்திபன், சிவகுமார், பசுபதி, சத்யராஜ், சிபிராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ரேகா, தன்ஷிகா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகைகளும், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். மதியம் 1 மணியளவில் திரைத்துறையினர் நடத்திய போராட்டம் முடிந்தது. இதற்கு முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். அரசியலற்ற பொது நோக்கத்தில் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். திரையுலகினரின் கையெழுத்துக்களைப்பெற்று தீர்மானங்கள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் மக்களுக்கான அரசு என்றால் மக்களின் உணர்வுகளை மதியுங்கள் என திரையுலகினர் முழக்கமிட்டனர். அதன்பின் பேசிய விஷால், ‘விவசாயம் வாழவேண்டும், விவசாயி வாழ வேண்டும் என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo