Onetamil News Logo

 பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்திற்கு உறுப்பினராக சேர  கால்நடைகள் மீது விருப்பம் கொண்ட ஆண் பெண் நபர்கள்; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி, தகவல்

Onetamil News
 

 பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்திற்கு உறுப்பினராக சேர  கால்நடைகள் மீது விருப்பம் கொண்ட ஆண் பெண் நபர்கள்; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி, தகவல்


தூத்துக்குடி 2019 ஜூலை 9 ; தூத்துக்குடி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 2001-ன் படியும்  உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்திற்கு உறுப்பினராக சேர  கால்நடைகள் மீது விருப்பம் கொண்ட ஆண் பெண் (18 வயதிற்கு மேல் உள்ள) நபர்கள்; 31.07.2019-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... தூத்துக்குடி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 2001-ன் படியும்  உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்திற்கு உறுப்பினராக சேர  கால்நடைகள் மீது விருப்பம் கொண்ட ஆண் பெண் (18 வயதிற்கு மேல் உள்ள) நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
உறுப்பினர்கள் விண்ணப்பத்தில் அவர்களது சுயகுறிப்புரை உடன் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்படுவேன் என உறுதி மொழி அளித்தல் வேண்டும். உறுப்பினர்கள் எவ்வித அரசியல் கட்சி செயல்பாட்டிலோ, குற்ற நடவடிக்கையிலோ, ஈடுபட்டவராகவோ ஈடுபடவோ இருத்தல்  கூடாது. இச்சங்க உறுப்பினகர்களுக்கு ஊதியமோ அல்லது மதிப்புதியமோ வழங்கப்பட மாட்டாது.
சேர்க்கை கட்டணம் ரூ100/-, ஆண்டு கட்டணம் ரூ200/-, விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு 31.07.2019-க்குள் பெறப்பட வேண்டும் அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo