Onetamil News Logo

அரசு பேருந்தை சேதப்படுத்தி ஓட்டுநரை தாக்கிய இரண்டு பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு 

Onetamil News
 

அரசு பேருந்தை சேதப்படுத்தி ஓட்டுநரை தாக்கிய இரண்டு பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 14 ;தூத்துக்குடி அருகே அரசு பேருந்தை சேதப்படுத்தி ஓட்டுநரை தாக்கிய இரண்டு பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள கீழ கூட்டுடன்காடு ஜங்சன் பகுதியில் கடந்த 28.09.2014 அன்று சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை (TN 72 N 1243) கல்லால் தாக்கி சேதப்படுத்திய சிலர், பேருந்து ஓட்டுனரான முருகன் (38) என்பவரையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஓட்டுநர் முருகன் அளித்த புகாரின் பேரில் அப்போதைய புதுக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் ஆறுமுகசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.*
இது தொடர்பாக புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மகன் ஐயப்பராஜ் (23), அய்யனார் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லட்சுமணன் (24) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - II ல் நடைபெற்று வந்தது.*
வழக்கை விசாரித்த நீதிபதி கௌதமன், குற்றம்சாட்டப்பட்ட ஐயப்பராஜ் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இன்று (14.08.2019)தீர்ப்பளித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo