Onetamil News Logo

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து ஜெனோ இன்ஜினியரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் ஜெனோ ரவேல் குரூஸ் பர்ணாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Onetamil News
 

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து ஜெனோ இன்ஜினியரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் ஜெனோ ரவேல் குரூஸ் பர்ணாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


தூத்துக்குடி 2020 மார்ச் 25; தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து ஜெனோ இன்ஜினியரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் ஜெனோ ரவேல் குரூஸ் பர்ணாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 
தூத்துக்குடி மாகராட்சி ஆவதற்கு கடந்த நூறாண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குடன் திட்டமிட்டு தூத்துக்குடி நகரை வளர்ச்சியடைய செய்த நகரின் தந்தை, குடிநீர் தந்தவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து சேவையை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15ஆம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த தந்தை குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் மற்றும் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஜெனோ இன்ஜினியரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் ஜெனோ ரவேல்  வேண்டுகோள் விடுத்தார்.இந்த நிலையில் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ,ஆகியோருக்கும்  குரூஸ் பர்னாந்து பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க தூத்துக்குடி வந்த முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த முன்னாள் அமைச்சர் சி.தா.செல்லப்பாண்டியன்,முன்னாள் துணை மேயர் சேவியர் ஆகியோருக்கும் நன்றியை  தெரிவித்துக்கொள்கிறேன்.என்று குரூஸ் பர்னாந்து சிலை மேம்பாட்டு பணிகளை பல ஆண்டுகளாக செய்துவரும் ஜெனோ இன்ஜினியரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் ஜெனோ ரவேல் நம்மிடையே தெரிவித்தார். விழாவில் தூத்துக்குடியிலுள்ள முக்கிய அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo