Onetamil News Logo

வல்லநாட்டில் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு மின் பயனீட்டுக் கட்டண அட்டை வெளியீட்டு விழா

Onetamil News
 

வல்லநாட்டில் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு
மின் பயனீட்டுக் கட்டண அட்டை வெளியீட்டு விழா


தூத்துக்குடி 2020 பிப்.20:வல்லநாட்டில் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு மின் பயனீட்டுக் கட்டண அட்டை வெளியீட்டு விழா நடந்தது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 23 வரை காசநோய் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.  இந்த வாரத்தை அனுசரிக்கும் விதமாக  தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் விழிப்புணர்வு இலவச மின் பயனீட்டுக் கட்டண அட்டை வெளியீட்டு விழா வல்லநாடு கஸ்பா ஊராட்சி மன்ற தலைவர் மு.சந்திரா முருகன் தலைமையில் வல்லநாடு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் வைத்து 20.02.2020 (வியாழக்கிழமை) முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி ,முன்னிலை வகித்தார்கள்.வணிக ஆய்வாளர் முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
வல்லநாடு கஸ்பா ஊராட்சி மன்ற தலைவர் .மு.சந்திரா முருகன் காசநோய் விழிப்புணர்வு இலவச மின் பயனீட்டுக் கட்டண அட்டையை வெளியிட அதை மின்சார வாரிய முதல்நிலை ஆக்க முகவர்                 திரு.மு.அ.முகமது ரபி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.  அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இலவசமாக கட்டண அட்டையை வல்லநாடு கஸ்பா ஊராட்சி மன்ற தலைவர் மு.சந்திரா முருகன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி ஆகியோர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் நயினார், மணிகன்டன, மின்சார வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இறுதியாக மின்பாதை ஆய்வாளர் பெருமாள்  நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo