Onetamil News Logo

தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த  குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கேட்டு தமிழக அரசுக்கு பரதர்நலச் சங்கம் சார்பாக கோரிக்கை!

Onetamil News
 

தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த  குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கேட்டு தமிழக அரசுக்கு பரதர்நலச் சங்கம் சார்பாக கோரிக்கை!


தூத்துக்குடி 2019 நவம்பர் 13 ; தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கேட்டு தமிழக அரசுக்கு பரதர்நலச் சங்கம் சார்பாக கோரிக்கை! விடுத்துள்ளனர்.                                 
தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த தந்தை குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் மற்றும் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசுக்கு பரதர்நலச் சங்கம் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது 
தூத்துக்குடி மாகராட்சி ஆவதற்கு கடந்த நூறாண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குடன் திட்டமிட்டு தூத்துக்குடி நகரை வளர்ச்சியடைய செய்த நகரின் தந்தை, குடிநீர் தந்தவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து. அவரது 150 வது பிறந்தநாள் விழா வரும் 15 மற்றும் 16 தேதிகளில் காெண்டாடப்படுகிறது.
இது குறித்து பரதர் நலச்சங்க அவை தலைவர் ஞாயம் ரொமால்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 150 வது பிறந்தநாள் வரும் 15 மற்றும் 16 தேதிகளில் காெண்டாடப்படுகிறது. 15 ம் தேதி அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது. 16 ம் தேதி மாலை 6 மணியளவில் பனிமய மாதா ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்னோ அரங்கத்தில், பரதர் குல தலைவர் ஜேபிஎல் பெனோ வென்சர் ரோச் தலைமையில், குரூஸ் பர்னாந்து நினைவு உள்ளரங்க பொது கூட்டம் நடைபெறுகிறது. மேலும் பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியிடப்பட உள்ளது.
விழாவில் தூத்துக்குடியிலுள்ள அனைத்து சமூக பெரியவர்கள், பிரமுகர்கள், கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரையுள்ள பரதர் நல அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் தமிழகஅரசு சார்பில் குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம் அமைக்கவும், அவருடைய பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தி கோரிக்கைகள் வைக்கப்பட உள்ளது என தெரிவித்தார். பேட்டியின் போது பரதர் நலச்சங்க தலைவர் ஜான்சன், பொது செயலாளர் கனகராஜ், பொருளாளர் பியோ கர்டோசா, துணை தலைவர் ஜான்சன் கல்மோத்தா, ராயப்பன், இருதயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo