Onetamil News Logo

விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், நலிவுற்றோர், ஆதவரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப்பெண்கள் மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற ஆகஸ்ட்  31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Onetamil News
 

விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், நலிவுற்றோர், ஆதவரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப்பெண்கள் மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற ஆகஸ்ட்  31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


தூத்துக்குடி  2019 ஜூலை 16 ; தூத்துக்குடி மாவட்டத்தில் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், நலிவுற்றோர், ஆதவரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப்பெண்கள் மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற 31.08.2019-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்.
                                                                                                                                            இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது ....... தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக 20 வயது முதல் 40 வயது வரையிலான விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், நலிவுற்றோர், ஆதவரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப்பெண்களுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தையல் இயந்திரம் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்குள், இருப்பிட சான்று மற்றும் ஜாதிச்சான்று ஆகியவை வட்டாட்சியரிடம் பெறவேண்டும், பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து 6 மாதத்திற்கான தையல் பயிற்சி சான்று மற்றும் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல், மற்றும் மனுதாரரின் இரண்டு கலர் புகைப்படம் (Passport Size Photo)  ஆதார் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில்  31.08.2019-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டி அலுவலகம்:
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோரம்பள்ளம்,
தூத்துக்குடி– 628101.
அலுவலக தொலைபேசி எண் : 0461 – 2325606
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர்; சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo