தூத்துக்குடி காங்கிரஸ் பிரமுகர் சண்முகத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாழ்த்து
தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம் பொதுவாழ்வில் பொன்விழா நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதாஜீவன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.த.செல்லப்பாண்டியன், சண்முகநாதன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் உள்பட பல்வேறு அரசியில் கட்சி பிரமுகர்களும் பொது அமைப்பை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகத்தை முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான சி த செல்லப்பாண்டியன், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட ஜெ பேரவை மூர்த்தி, முன்னாள் வட்ட செயலாளர் சகாயராஜ், முன்னாள் அரசு போக்குவரத்து மண்டல இணை செயலாளர் சங்கர், வட்ட பிரதிநிதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.