Onetamil News Logo

தூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு ரூ.17.25 லட்சம் மதிப்பில் புதிய வாகனத்தினை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, பள்ளிக்கு வழங்கினார். 

Onetamil News
 

தூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு ரூ.17.25 லட்சம் மதிப்பில் புதிய வாகனத்தினை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, பள்ளிக்கு வழங்கினார்.   


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 25 ;தூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் மூலம் ரூ.17.25 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட பள்ளி புதிய வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பெற்று பள்ளிக்கு வழங்கினார். 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் மூலம் தூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு புதிய வாகனம் வழங்கும் விழா இன்று (25.02.2020) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு புதிய வாகனத்தினை பெற்று பள்ளிக்கு வழங்கினார். இவ்விழாவில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) பா.விஷ்ணு சந்திரன், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் துணை பொது மேலாளர் ஸ்ரீகாந்த்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,பேசியதாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி ஆகிய 2 இடங்களில் சிறப்பு பள்ளிகள் வித்யா பிரகாசம் சேரிட் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் பயின்று வருகின்றனர். 2003 முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. கோவில்பட்டி சிறப்பு பள்ளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  விரைவில் திறக்கப்பட உள்ளது. தூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு ஏற்கனவே ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு ஏற்கனவே இருந்த பள்ளி வாகனம் பழமையானதாக உள்ளதால் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் சிஎஸ்ஆர் நிதி மூலம் ரூ.17.25 லட்சம் மதிப்பிலான பேருந்து புதிதாக வழங்கப்படுகிறது. சாமி பியூல் சர்வீஸ் உரிமையாளர் திராவிடமணி அவர்களின் முயற்சியால் வழங்கப்பட்டுள்ளது.  கோவில்பட்டி சிறப்பு பள்ளிக்கும் தூத்துக்குடி விமான நிலைய சிஎஸ்ஆர் நிதியில் இருந்து பள்ளி பேருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். இப்பள்ளியில் பயிலும் 14 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தொழில் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பாலசுப்பிரமணியம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், சாமி பியூல் சர்வீஸ் உரிமையாளர் திராவிடமணி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் மேலாளர் ராஜாராம், பள்ளி தலைமை ஆசிரியை கவிதா மற்றும் சிறப்பு ஆசிரியர்கள், சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo