Onetamil News Logo

அனைத்து ரேசன்  கடைகளிலும் அனைத்து வேலை நாட்களிலும் அனைத்துப் பொருட்களும் தரமானதாக தாமதமின்றி சரியான அளவில் பொது மக்களுக்கு கிடைத்திட தூத்துக்குடி மதிமுக கோரிக்கை   

Onetamil News
 

அனைத்து ரேசன்  கடைகளிலும் அனைத்து வேலை நாட்களிலும் அனைத்துப் பொருட்களும் தரமானதாக தாமதமின்றி சரியான அளவில் பொது மக்களுக்கு கிடைத்திட தூத்துக்குடி மதிமுக கோரிக்கை   


 தூத்துக்குடி 2019 ஜூலை 15 ; தூத்துக்குடி மாவட்டத்தல் உள்ள அனைத்து ரேசன்  கடைகளிலும் அனைத்து வேலை நாட்களிலும் அனைத்துப் பொருட்களும் தரமானதாக தாமதமின்றி சரியான அளவில் பொது மக்களுக்கு கிடைத்திட உரிய நடவடிக்கை வேண்டி மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மதிமுக சார்பில் கலெக்டர் யிடம் வழங்கிய கோரிக்கை ; தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் அனைத்து பயனாளிகளும் இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் மற்ற பொருட்களையும் பெற முடியும்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, மண்ணெண்ணை, பாமாயில் போன்ற பல பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு கடந்த பல மாதங்களாக வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரங்களில் மட்டும் சில பொருட்கள் வழங்கி விட்டு அதன் பின்னர் அந்த பொருட்களையும் வழங்குவது இல்லை. தமிழக அரசு எங்கள் கடைக்கு மிக குறைந்த அளவுதான் பொருட்களை ஒதுக்கி இருக்கிறார்கள். எனவே நாங்கள் அனைவருக்கும் பொருட்கள் வழங்க இயலவில்லை என ரேசன் கடை ஊழியர்கள் பொது மக்களிடம் தெரிவிக்கிறார்கள். பல பொருட்கள் அனைவருக்கும் வழங்குவதே இல்லை. இது பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும்.
பொது மக்களுக்கு உரிய அரிசி, மற்றும் பொருட்கள் முழுமையான அளவில் வழங்குவதும் இல்லை. எப்போது ரேசன் கடைக்கு சென்றாலும் பல பொருட்கள் இருப்பு இல்லை என சொல்கிறார்கள். இதனால் மாதத்தில் பல தடவை ஏழை, எளிய மக்கள், பெண்கள் ரேசன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு அலைய வேண்டியது உள்ளது. அவர்களுக்கு உரிய மாதாந்திர ஒதுக்கீடு பொருட்களை பெற முடியவில்லை.
மேலும் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் சில பொருட்களின் தரம் மோசமாக உள்ளது. பல பொருட்களின் எடையும் சரியான அளவில் இல்லை. இது நுகர்வோர்களை ஏமாற்றும் செயலாகும்.
பல ரேசன் கடைகளில் பொதுமக்கள் வாங்க விரும்பாத அல்லது தங்களுக்கு தேவையற்ற பொருட்கள் வேண்டாம் என ரேசன் கடை ஊழியர்களிடம் தெரிவித்தால் அவர்கள் அதை கேட்காமல் சில பொருட்களை கண்டிப்பாக வாங்கினால் தான் மற்ற பொருட்களை வழங்க முடியும் என கண்டிப்பாக கூறுகிறார்கள். இதுவும் மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
பல ரேசன் கடைகளில், சில முக்கிய பொருட்கள் எப்போது வழங்கப்படும் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகைகளில் தெரிவிப்பது இல்லை. இதனால் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பல ரேசன் கடைகளில் பொருட்களை பொது மக்களுக்கு வழஙகியதாக கூறி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்று விடுகிறார்கள்.
எனவே பொது மக்கள் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளிலும் அனைத்து நாட்களிலும் அனைத்து ரேசன் பொருட்களும் தரமானதாக தாமதமின்றி, சரியான அளவில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுத்து பொது மக்களுக்கு உதவிட இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo