Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் 


தூத்துக்குடி 2018 டிசம்பர் 8 ;தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீபராங்குச திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
                                                                                                                                            முகாமிற்கு, கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பாவெங்கடாச்சாரி, ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் சரக டி.எஸ்.பி.,சகாயஜோஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் தானம் செய்கின்றனர். பொதுவாக எத்தனையோ தானங்கள் இருந்தாலும் அதில் கண்தானம் என்பது மிகமிக முக்கியமானதாகும். ரத்ததானம் செய்யும் இளைஞர்கள், மாணவர்களை பெற்றோர்கள் தடுத்திடாமல் ஊக்கப்படுத்திடவேண்டும். ரத்ததானம் செய்வதால் உடல்நலம் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். கண்தானம், ரத்ததானம் செய்வதற்கு இளைஞர்கள் மட்டுமல்லாது அனைவரும் முன்வந்திடவேண்டும் என்றார்.
முகாமில், கண் மருத்துவர் ராம்பிரியா தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினர். இதில், ஆழ்வார்தோப்பு, நளராஜபுரம், நவலெட்சுமிபுரம், கேம்லாபாத், ஆழ்வார்திருநகரி, மளவராயநத்தம், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். முகாமில் பங்கேற்ற 21பேர் இலவச கண்அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், கிராம உதய தன்னார்வ தொண்டர் முத்துராஜ், மருத்துவப்பிரிவு பொறுப்பாளர் கண்ணன், தன்னார்வ தொண்டர் மணிக்குமார், மையத்தலைவர்கள் முழுமதி, கீதா, ஆயிஷா உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தன்னார்வ தொண்டர் செல்வன்துரை நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo