Onetamil News Logo

முதியோர் இல்லங்கள் &ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லங்கள் கம்பெனி சட்டம் /சங்கச்சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று பெறவேண்டும் ; கலெக்டர் சந்தீப் நந்தூரி, தகவல் 

Onetamil News
 

முதியோர் இல்லங்கள் &ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லங்கள் கம்பெனி சட்டம் /சங்கச்சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று பெறவேண்டும் ; கலெக்டர் சந்தீப் நந்தூரி, தகவல் 

தூத்துக்குடி 2019 டிசம்பர் 2 ; தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசின் மான்யம் பெறும் பொருட்டு நிறுவனத்தினை அறக்கட்டளை சட்டம்/கம்பெனி சட்டம் /சங்கச்சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசின் மான்யம் பெறும் பொட்டு நிறுவனத்தினை அறக்கட்டளை சட்டம் /கம்பெனி சட்டம்ஃசங்கச்சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று (ம) இன்று வரை புதுப்பிக்கப்பட்ட சான்று, மாவட்ட சமூகநல அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் பதிவுச் சான்று (ம) புதுப்பித்தல் சான்று, பொதுப்பணித் துறை அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட கட்டிட உறுதிச் சான்று, சுகாதாரத் துறையிடமிருந்து பெறப்பட்ட சுகாதாரச் சான்று, தீயணைப்பு துறையிடமிருந்து பெறப்பட்ட சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட D-License  சான்று, முதியோர் இல்லம் செயல்படுத்துவதற்காக வேறு எந்த ஒரு நிதியும் பெறவில்லை என்ற சான்று (வெளிநாட்டு நிதி உட்பட). ஒருங்கிணைந்த வளாத்திற்கு மட்டும் மேற்கண்ட சான்றுகளுடன் இளைஞர் நீதிச்சட்டம் 2000 திருத்தப்பட்டவை 2006 (Juvenile Justice Act 2006)ன் கீழ் பெறப்பட்ட சான்று இணைக்கப்பட வேண்டும். அனைத்துச் சான்றுகளும் பெறப்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புக் கொள்ள வேண்டிய அலுவலகம்
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோரம்பள்ளம்,
தூத்துக்குடி – 628101.
தொலைபேசி எண்: 0461 – 2325606
இந்த தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo