Onetamil News Logo

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை,கல்லாமொழி  மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ;ஆலந்தலை,கல்லாமொழியில் தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை 

Onetamil News
 

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை,கல்லாமொழி  மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ;ஆலந்தலை,கல்லாமொழியில் தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை 


திருச்செந்தூர்,2019 செப்.20 ; திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமம் உள்ளது. இங்கு 4500 பேர் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கடல் நாளுக்கு நாள் முன்னேறி வருவதால் அரிப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாதத்தில் சுமார் 60 அடி தூரம் அரிப்பு ஏற்பட்டு ள்ளது. இதனால் பைபர் படகுகளை அங்கு நிறுத்த முடியவில்லை. தற்போது அருகில் உள்ள கல்லாமொழியில் அனல்மின் நிலையத்திற்காக நிலக்கரி தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக கடலில் ராட்சத கற்களை கொண்டு நிரப்புவதால் அந்த தண்ணீர் ஆலந்தலை வரை வந்து விடுகிறது. இதனால் கடல் அரிப்பு தொடர்ந்து உள்ளது. கடல் அரிப்பால் வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. அங்குள்ள மக்கள் வீடுகளை காலி செய்யும் அவலநிலை ஏற்பட்டு ள்ளது. இதை தடுக்க ஒரே வழி ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் என்பதே அப்பகுதி மக்களில் அத்தியாவசிய கோரிக்கையாகும். இதற்காக பல போராட்டங்கள் நடத்தி உள்ளனர்.
தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் செய்திதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அந்த பகுதியை பார்வையிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்காக ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் எஸ்டிமேட் ரூ.48 கோடியாகும் என்று தெரிகிறது. இதுபற்றி மீண்டும் சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் முதல்வருடன் பேசி சட்டசபையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். ஆலந்தலையில் நாளுக்கு நாள் கடலரிப்பு அதிகரித்து வருவதால் பெரிய அளவில் ஆபத்து வரும் முன் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று ஊர் நல கமிட்டி தலைவர் தொம்மை பர்னாந்து, செயலாளர் ஜெயபால் ஆகியோர் வலியுறுத்தி இருப்பதோடு, காலம் தாழ்த்தினால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo