Onetamil News Logo

ஆவின் பால் பொருட்கள் விற்பனை அங்காடி ;எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Onetamil News
 

ஆவின் பால் பொருட்கள் விற்பனை அங்காடி ;எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.


தூத்துக்குடி 2020 மே 21 ;ஏரல் அருகே பண்ணைவிளையில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை அங்காடி எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பண்ணைவிளையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய ஆவின் பால் பொருட்கள் விற்பனை அங்காடியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ணைவிளையில் புதிய ஆவின் பாலகம் மற்றும் பால் பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு விழா நிகழ்ச்சி தூத்துக்குடி ஆவின் பொது மேலாளர் திருயோகராஜ் தங்கையா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிஎஸ்ஐ சேகர குரு டேவிட் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ புதிய ஆவின் பால் பொருட்கள் விற்பனை அங்காடியை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், பண்ணை விளை வெற்றிராஜ், அதிமுக பிரமுகர்கள் வேதமாணிக்கம், பண்டாரவிளை பொன்ராஜ், பெருமாள், பால்துரை, சுரேஷ், திருத்துவராஜ், எபன் உட்பட பலர் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo