Onetamil News Logo

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் 1  லட்சம் ரூபாய் மதிப்பில் கஜா புயல் நிவாரண பொருட்களை பேராவூரணியில் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் ஜெகஜீவன்,செந்தில் வழங்கினார்கள்       

Onetamil News
 

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் 1  லட்சம் ரூபாய் மதிப்பில் கஜா புயல் நிவாரண பொருட்களை பேராவூரணியில் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் ஜெகஜீவன்,செந்தில் வழங்கினார்கள்           


                                                                                                                                       

தூத்துக்குடி 2018 டிசம்பர் 4: தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் 1  லட்சம் ரூபாய் மதிப்பில் கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.      
தமிழகத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, தூத்துக்குடியில்  சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன.                                                                      
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவுக்கு உட்பட்ட பிச்சிமுனை கிராமத்தில் உள்ள மிகவும் பரிதாபத்திற்குரிய 38  குடும்பத்தினர்களை இனம் கண்டு நாகை மாவட்ட லோட்டஸ் டிவி செய்தியாளர் விஜய்  வழிகாட்டுதலில்  செயற்குழு உறுப்பினர் செந்தில் ஆலோசனையில் பெயரில் வழங்கப்பட்டது .. தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கொசுவலைகள்,போர்வைகள்,கோதுமை மாவு பாக்கெட்டுகள்,புதிய ஆடைகள்,பனியன்கள்,கம்பளி போர்வைகள்,பிஸ்கட்டுகள்,ரஸ்குகள்,மகி ,சேமியா பாக்கெட்டுகள், அரிசி, காய்கறிகள், செருப்புகள்,தண்ணீர் பாக்கெட்டு மூடைகள்,பெண்களுக்கு தேவையான பேடு உட்பட போன்றவை வழங்கப்பட்டது.
முன்னதாக  தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் சார்பில் கஜாபுயல் சிறப்பு  ஒலி ஒளி நாடா வெளியிட்டு விழா நடைபெற்றது.தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ,கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.                                                         
 தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் சார்பில் கஜாபுயல் சிறப்பு  ஒலிஒளி நாடா வெளியிட்டு விழாவிற்கு  பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.முன்னதாக மன்ற செயற்குழு உறுப்பினர் ஜெகஜீவன் வரவேற்புறையாற்றினார்.பொருளாளர் சீனிவாசன், கௌரவ ஆலோசகர் அருண், துணை தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஒலி, ஒளி பாடல் அடங்கிய நாடாவை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.முரளிரம்பா வெளியிட்டார்கள், அதை  செல்வராஜ் பெற்றுக்கொண்டார்கள். அதன் பின்னர்  அவர் பேசியதாவது....பாடலை உணர்வுபூர்வமாக பாடினார்.பத்திரிகையாளர் பாடகராக இருப்பது மகிழ்ச்சி,மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.என்று பேசினார்.அதன் பின்னர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முரளி ரம்பா,  கொடியசைத்து துவக்கி வைத்தார்,நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சீலன்ஸ்ருதி,செயற்குழு உறுப்பினர்கள் ஆத்திமுத்து,செந்தில், கார்த்திகேயன் உறுப்பினர்கள் அகமது, சதீஸ், மகாராஜன், ஆனந்தராஜ், மோகன், பேச்சிமுத்து, ராஜ் தனபால்,அலெக்ஸாண்டர்,  உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் , தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.              
 தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு  தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர் ஜெகஜீவன் ஏற்பாடு செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo