Onetamil News Logo

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து  உடல் தகனம் செய்யப்பட்டது

Onetamil News
 

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து  உடல் தகனம் செய்யப்பட்டது


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 15 ;காமநாயக்கன்பட்டி மாதா ஆலயத்தில் திருவிழா  பாதுகாப்பு பணியில் இருக்கும் போது திடீரென நெஞ்சுவலி எற்பட்டு கோவில்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து  மரணம் அடைந்தார்.
தூத்துக்குடி எஸ்.பி அருண் பால கோபாலன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தூத்துக்குடியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வந்தவர் சி.கே.இசக்கிமுத்து இவர் தூத்துக்குடி நகர காவல்நிலையமான தென்பாகம்,மத்திய பாகம் ,சிப்காட் , முத்தையாபுரம் போன்ற காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஆக பணியாற்றிய போது பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டவர்  அதன் பிறகு நாகர்கோவிலில் சட்ட ஒழுங்கு பிரிவு  காவல்துறை ஆய்வாளராகவும் தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு  ஆய்வாளர் ஆகவும் பணியாற்றியவர் கடந்த 20 தினங்களுக்கு முன்பு தான் தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் கிழக்கு காவல்நிலையத்திற்கு காவல்துறை ஆய்வாளராக நியமிக்க ப்பட்டார் இவர் பல்வேறு குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.பல்வேறு கிரைம் குற்றங்களுக்கு முடிவு கட்டியவர் என்ற பெயர் உண்டு  இவர் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள பரலோக மாதா ஆலயத்தில்  நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு பணியில் ஆய்வாளர் இசக்கிமுத்து அவர்கள் ஈடுபட்டு வந்தார் இந்த ஆலயத்தில் பாதுகாப்பு பணியில் அவர்  ஈடுபட்டுயிருக்கும் போது நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு முச்சுதிணறல் எற்பட்டது உடனே அருகில் இருந்த காவல்துறையினர் அவரை கோவில்பட்டியில்  உள்ள தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டது . இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. 
இந்நிலையில் அவர் உடல் நேற்று அவரது இல்லத்திற்கு காவல்துறையினர் களால் கொண்டுவரப்பட்டது இன்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மறைந்த ஆய்வாளர் இசக்கிமுத்து அவர்கள் இல்லத்திற்கு வந்து மறைந்த ஆய்வாளருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் அதன்பிறகு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி பிரகாஷ் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெயராஜ் தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர்ஜீன்குமார், தனிபிரிவு ஆய்வாளர் பாலமுருகன்  மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி உதவி ஆய்வாளர்  ராஜாமணி,நாகராஜன்  மற்றும் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் போலீசார்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களிலிருந்து காவல்துறை  அதிகாரிகள் மற்றும்  போலீசார்கள் இன்று  அஞ்சலி செலுத்தினார்கள் மாவட்டத்திலுள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள்  பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மாநில நிர்வாகிகள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்கள்
தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் த.சண்முகசுந்தரம், செயற்குழு உறுப்பினர் எம். ஆத்திமுத்து மன்ற உறுப்பினர் எம்.கண்ணன் உட்பட பத்திரிகையாளர்கள் அஞ்சலி செலுத்தினர்
 பணியில் இருந்தபோது இவர் மரணம் அடைந்ததால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இவருக்கு அரசு மரியாதை வழங்கும் வகையில் இன்று அவரது வீட்டில் வைத்து ஏ ஆர் போலீசார்கள் மரியாதை செலுத்தினார்கள்.அதன் பிறகு  அவரது உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது அங்கு 21துப்பாக்கி  குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆய்வாளர் இசக்கிமுத்து  உடல் தகனம் செய்யப்பட்டது. காவல்துறையின் அமைச்சராக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பணியில் இருக்கும் போது உயிர்யிழந்த ஆய்வாளர் இசக்கிமுத்து  அவரது குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் உடனடியாக அரசு வேலையை அவரது குடும்பத்திற்கு  வழங்கி உதவ  வேண்டும் என்றும் மனைவி செல்வி,  இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ள இவரது குடும்பத்திற்கு தமிழக  முதல்வர் உடனடியாக உதவிட வேண்டும் என்றும் தமிழக காவல்துறை இயக்குனர் DGP அலுவலகத்தில்  இருந்தும் உடனடியாக உதவிட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் தெரவித்தார்கள்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo