Onetamil News Logo

பெண்ணின் வயிற்றில் இருந்த 7 கிலோ கட்டியை நீக்கி  டாக்டர் கோமதி சாதனை ​

Onetamil News
 

பெண்ணின் வயிற்றில் இருந்த 7 கிலோ கட்டியை நீக்கி  டாக்டர் கோமதி சாதனை ​ 


 


தூத்துக்குடி ஜனவரி 11 ;பெண்ணின் வயிற்றில் இருந்த 7 கிலோ கட்டி அகற்றம்:  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.                                                                                                                                                                                                                              தூத்துக்குடி அண்ணா நகர் 9 வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் இவரது மனைவி மாரியம்மாள் (51). இவர், கடந்த பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமடையவில்லையாம். இதற்காக ஏராளமான பணத்தை செலவழித்து மனமுடைந்த மாரியம்மாள், கடைசியாக 5-1-2018 அன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரியம்மாளை உள் நோயாளியாக சேர்த்து தீவிர பரிசோதனைகளை செய்தனர். அப்போது,120 கிலோ எடை கொண்ட மாரியம்மாளின் வயிற்றில் இருந்த கர்பப்பையில் 7 கிலோ அளவுள்ள கட்டி இருந்தது தெரியவந்தது.                                                                                                                                                                                                                                                இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் கனி அறிவுரையின்பேரில், மகப்பேறு பிரிவு தலைமைப் பேராசிரியர் கோமதி , தலைமையிலான மருத்துவர்கள், மாரியம்மாள் கர்பப்பையில் இருந்த கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர்.                                                                                                                                                                             இதுகுறித்து மருத்துவர் கோமதி கூறியதாவது: மாரியம்மாள் தனது வயிற்றில் இருப்பது கட்டி எனத் தெரியாமல் கடந்த பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார்.  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இறுதியாக தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, மாரியம்மாள் வயிற்றில் இருந்த புற்றுநோய் அல்லாத 7 கிலோ அளவிலான கட்டி அகற்றப்பட்டது. இது போன்ற அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்ய வேண்டுமென்றால் ரூ. ஒரு லட்சம் வரை செலவாகும் என்றார்.                                                                                                                                           இதுகுறித்து மாரியம்மாள் கூறுகையில், 'பல ஆண்டு பிரச்னைக்கு தற்போதுதான் தீர்வு கிடைத்துள்ளது. அறுவைச் சிகிச்சை செய்தபிறகு வயிறு வலி தெரியவில்லை. நல்ல முன்னேற்றம் தெரிகிறது' என்றார். சிறப்பான முறையில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவக் குழுவை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கனி பாராட்டினார்.                                                                                                                                                                                                                                                         இந்த குழுவில் மயக்க நிபுணர் டாக்டர் .முத்து செண்பகம்,டாக்டர் .தையூபா கான் ,டாக்டர் முத்து லெட்சுமி,டாக்டர் .அனிதா காத்ரின் ப்ரீத்திமா,சிறுநீரக நிபுணர் டாக்டர் சரவண ராஜா உட்பட பலர் பங்கு பெற்று சிறந்த சேவை செய்துள்ளனர்.இவர்களை பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள்.                                                                                                                                                                                                                                            தூத்துக்குடி மகப்பேறு பகுதியில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.இங்கு வரும் மகப்பேறு பெண்களுக்கு முகம் சுளிக்காமல் டாக்டர் கோமதி தலைமையிலான குழுவானது நல்ல சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டு அனைவருக்கும் நல்ல சேவையை செய்து வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo