Onetamil News Logo

காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது

Onetamil News
 

காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது


தூத்துக்குடி 2018 ஜூலை 10 ; காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்கள் 54 மற்றும் 56ன் மற்றும் ஸ்பார்க் அமைப்பின் சார்பாக ரத்ததான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்தவர்களை திட்டஅதிகாரி முனைவர் ஆ.தேவராஜ் வரவேற்றார்.  கல்லூரியின் வணிகவியல் துறைதலைவரும்,பொறுப்பு முதல்வருமான முனைவர் கு.காசிராஜன் தலைமையுரையாற்றினார்.  சிறப்பு விருந்தினராக மனநலமருத்துவர் சிவசைலம் சிறப்புரையாற்றினார்.  அவர்தம் சிறப்புரையில் ரத்ததானம் பலஉயிர்களை காக்கும் என்ற நிலை நீங்கி இன்றுஉடல் உறுப்பு தானம் என்பது இன்றைய சூழலில் அத்யாவசியமான ஒன்றாக விளங்குவதையும் விளக்கினார்.  ஒவ்வொரு மனிதனின் உடலிலும் 5லிட்டர் ரத்தம் உள்ளது,ஒவ்வொரு முறை ரத்ததானம் செய்யும் பொழுது 350மி.லிட்டர் ரத்தம் மட்டுமே தானமாக வழங்கப்படும்.  அந்த ரத்தமானது நமது உடலின் நிலைக்கேற்ப சுமார் 15 முதல் 90 நாட்களுக்குள் மீண்டும் உற்பத்தியாகிவிடும்.  ஓவ்வொரு ரத்ததானத்திற்குப் பின்னும் நமதுஉடலில் ரத்த சிவப்பணுக்களின் நோய் எதிர்ப்புத் தன்மையும் உயர்வடையும் என்றும் கூறினார்.  ஒவ்வொரு மனிதரும் 90 நாட்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம் எனவும் கூறினார். பெண்கள் காலைஉணவினை தவறாது உட்கொள்வதால் அவர்களது அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இயலும் என்பதை தெளிவு படுத்தினார்.  வழக்குரைஞர் சொர்ணலதா வாழ்த்துரை வழங்கினார்.  நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி முனைவர் பா.பொன்னுத்தாய் நன்றியுரையாற்றினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அணி எண்.54 மற்றும் 56ன் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo