Onetamil News Logo

தூத்துக்குடி ஒன்றிய அலுவலகத்தை பால்வளத்துறையின் இயக்குநர்; சி.காமராஜ்,திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

Onetamil News
 

தூத்துக்குடி ஒன்றிய அலுவலகத்தை பால்வளத்துறையின் இயக்குநர்; சி.காமராஜ்,திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.


 

தூத்துக்குடி 2019 அக்டோபர் 8 ;தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தை பால்வளத்துறையின் இயக்குநர்; சி.காமராஜ்,திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவில்  புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா இன்று (08.10.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், பால்வளத்துறையின் இயக்குநர் .சி.காமராஜ், கலந்து கொண்டு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். மேலும், பால்வளத்துறையின் இயக்குநர்  ஆவின் பொருட்கள் விற்பனையை துவக்கி வைத்தார்.  
இவ்விழாவில், பால்வளத்துறையின் இயக்குநர் சி.காமராஜ், பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் திருநெல்வேலி மாவட்டத்தோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தது. இதை பிரித்து தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட போவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள்; 17.07.2019 அன்று சட்டப்பேரவை 110 விதியின்  கீழ் அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து 22.08.2019 அரசாணை வெளியிடப்பட்டு 26.08.2019 அன்று தூத்துக்குடி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் புதிதாக பதிவு செய்யப்பட்டது. 
தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து பிரிக்கப்படும் பொழுது நாள் ஒன்றுக்கு சுமார் 26,000 லிட்டர் பால் 160 பிரதம பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. அதேபோல் பால் விற்பனை சுமார் 185 முகவர்கள் மூலம் 21,000  லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்கள் பயன் பெறும் வகையில் 24 மணிநேரமும் செயல்படும் 5 பாலகங்கள் ஆறுமுகநேரி, ஆழ்வார்திருநகரி, கோவில்பட்டி, மற்றும் தூத்துக்குடியில் இரண்டு பாலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது விற்பனை அதிகரித்து 23,000 ஆயிரத்தை எட்டியுள்ளது. அதேபோல் பால் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு 30 ஆயிரத்தை எட்டியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 19 இலட்;சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இம்மாவட்டத்தை பொறுத்த வரை பால் தேவை அதிகமாக இருப்பதால் விற்பனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தாலுகா, நகராட்சி, பேரூராட்சி, பேரூந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஆவின் பாலககங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு தென்மாவட்டங்களில் பால் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது 30 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்வதை ஒராண்டுக்குள் 60 ஆயிரமாக உயர்த்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவ. மாணவியர்கள், பொது மக்கள் தரமான  ஆவின் பால் கிடைப்பதற்கும், குறைந்த விலையில் தரமான ஆவின் பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் புதிய ஆவின் பொருட்கள் அறிமுகம் செய்து வருகிறார்கள். இந்த பொருட்கள் அனைத்தும், அனைத்து மாவட்டங்களில் கிடைக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆவின் பொருட்கள் இலங்கை, சிங்கப்பூர், கத்தார், ஹாங்ஹாங் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் துபாய் நாட்டிற்கு ஆவின் பொருட்கள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, பொது மக்கள் குறைந்த விலையில் விற்கப்படும் தரமான ஆவின் பொருட்களை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என பால்வளத்துறை இயக்குநர் அவர்கள் பேசினார்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  பேசியதாவது:-
நமது மாவட்டத்தில், பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஆவின் பாலகங்கள் திறக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, 24 மணி நேரமும் செயல்படும் ஆவின் ஹைடெக் பார்லர் புதிதாக திறப்பதற்காக இடங்களை தேர்வு செய்யும் பணிகள் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகைத்தரும் இடமான மணப்பாடு, திருச்செந்தூர், குலசேகரப்பட்டணம் உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் விற்பனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நமது மாவட்டத்தில் தசரா திருவிழா தற்போது நடந்து வருவதை முன்னிட்டு குலசேகரப்பட்டிணம், அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைத்திட ஏதுவாக 7 இடங்களில் ஆவின் சார்பாக பாலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி தூத்துகுடியில் ஆரம்பிக்கபட்டு நடைபெற்று வரும் புத்தக திருவிழாவிலும் ஆவின் பாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பொது மக்கள் அதிகம் கூடும் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பிரத்தியேகமாக ஆவின் பாலகம் அமைக்கப்படும். தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மட்டுமே கிராம பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள்; கூட்டுறவு சங்கம் அமைத்து உள்ளுர் பிரதிநிதிகளை கொண்டு  அந்த சங்கத்தின் மூலம் தரமான பாலை கொள்முதல் செய்து கலப்பிடமில்லா பாலை நல்ல முறையில் மக்களுக்கு வழங்கி வருகிறது. பொது மக்கள் ஆவின் மூலம் வழங்கப்படும் நெய், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட தரமான பொருட்களை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசினார்.
இவ்விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன்,, திருநெல்வேலி மாவட்ட ஆவின் தலைவர் சுதாபரமசிவம், தூத்துக்குடி பொது மேலாளர் ஆவின் இ.திரியேகராஜ் தங்கையா, பொது மேலாளர்கள் (திருநெல்வேலி) ரெங்கநாதன், (கன்னியாகுமரி) தினேஷ்பாபு, பொது மேலாளர் (விற்பனை) புகழேந்தி) தூத்துக்குடி விற்பனை மேலாளர் சாந்தி, துணை மேலாளர்கள் (தூத்துக்குடி) சுரேஷ், (திருநெல்வேலி) சித்ராதேவி முக்கிய பிரமுகர்கள் அமிர்தகணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo