Onetamil News Logo

தூத்துக்குடி அருகே குழந்தைத் திருமணம் தடுத்து  நிறுத்தம் ;பரபரப்பு

Onetamil News
 

தூத்துக்குடி அருகே குழந்தைத் திருமணம் தடுத்து  நிறுத்தம் ;பரபரப்பு 


 தூத்துக்குடி 2020 மே 24 ;தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரபட்டி  வடக்கு  தெருவை சேர்ந்த சிவா இவரது மகன் விஜய் (வயது 27).,இவருக்கும்,அவரது உறவினரான முள்ளக்காடு  பார்வதிபுரத்தில் வசித்து வரும்  அத்தை மகளுக்கும்  திருமணம் செய்ய  இரு வீட்டாரும் கலந்து  பேசி முடிவு செய்தனர். அதன்படி  இன்று காலை அத்தி மரபட்டியில் திருமண  நடை பெரறுவதாக  இருந்தது.
இந்நிலையில்   மணப்பெண்   திருமண  வயதை அடையவில்லை என்று தூத்துக்குடியில் உள்ள சைல்டு வெல்பர்க்கு  தகவல் கிடைத்தது. அவர்கள் கொடுத்த புகாரின்  பேரில் முத்தையாபுரம் போலீஸ்  சிறப்பு  சப் ,இன்ஸ்பெக்டர் முத்தையா  மற்றும்  போலீசார்  அத்திமரபட்டிக்கு விரைந்து சென்று   திருமண வீட்டாரிடம்  மணப்பெண்ணின் வயது குறித்து  கேட்டனர் .
        போலீஸ்  விசாரணையில் மணப்பெண்ணுக்கு 17  வயதுதான்  ஆகிறது  என்பது தெரியவந்தது  இதையடுத்து போலீசார்  இரு வீட்டாரிடமும் குழந்தை திருமணம்  சட்டப்படி குற்றம். எனவே பெண்  திருமண வயதை அடைந்த பிறகு  திருமணம்  செய்து  வையுங்கள் என்று  எச்சரித்து அறிவுரை வழங்கினர்.

இதையடுத்து இரு வீட்டாரும் பெண்ணிற்கு  திருமண வயது வந்த  பின் திருமணத்தை நடத்தி  கொள்கிறோம்  என்று  ஒப்புதல்  அளித்தனர்  இதனால் இன்று நடைபெற இருந்த குழந்தை திருமணம் நிறுத்தப்பட்டது  இதனால்  அப்பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo