Onetamil News Logo

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தலைமையில் இன்று தாளமுத்து நகரில் கொடி அணிவகுப்பு

Onetamil News
 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முரளி ரம்பா, தலைமையில் இன்று தாளமுத்து நகரில் கொடி அணிவகுப்பு     


              தூத்துக்குடி 2019 மே 13 ;ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முரளி ரம்பா, தலைமையில் இன்று தாளமுத்து நகரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
    
    வருகிற 19.05.2019 அன்று நடைபெறவுள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர் (பொது) சுரேஷ்குமார் சர்மா  மற்றம் தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,   ஆகியோர்  தலைமையில் இன்று (13.05.2019) காலை 10.30 மணியளவில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஆயுதப்படையினர் மற்றும் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர்  பிரகாஷ், காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி வடபாகம்  பார்த்திபன், மத்தியபாகம்  ஜெயபிரகாஷ், தென்பாகம் ஜீன்குமார், தெர்மல்நகர்  ரஞ்சித் குமார், முத்தையாபுரம் சிவ செந்தில்குமார், போக்குவரத்துப்பிரிவு சிசில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட சுமார் 500 பேர்  கொண்ட காவல்துறை கொடி அணிவகுப்பு ஊர்வலம் தாளமுத்து நகர் ராஜபாளையம் சந்திப்பிலிருந்து புறப்பட்டு, தாளமுத்து நகர் பஜார்,  ஆசைத்தம்பி நகர், சவேரியார்புரம், மாதாநகர் மற்றும் சோட்டையன்தோப்பு வழியாக மீண்டும் தாளமுத்துநகர் வந்து நிறைவடைந்தது.
    அதே போன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லையான எம். சவேரியார்புரத்திலிருந்து புறப்பட்டு, தவசிப்பெருமாள் சாலை, குமாரசாமி நகர், பொன் நகர் ஆகிய வழியாக சென்று முத்தையாபுரம் பெட்ரோல் பங்க் சந்திப்பு வந்து நிறைவடைந்தது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo