Onetamil News Logo

அனைத்து பொது இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் வரும் 31ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் 

Onetamil News
 

அனைத்து பொது இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் வரும் 31ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் 


தூத்துக்குடி 2020 மார்ச் 23 ;தூத்துக்குடி மாவட்டத்தில்  மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து பொது இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் வரும் 31.03.2020 அன்று வரை தற்காலிகமாக மூடப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில்  மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து பொது இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் வரும் 31.03.2020 அன்று வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே பொதுமக்கள் வரும் 31.03.2020 வரை தங்களுக்கு தேவையான ஆன்லைன் சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க, ஏற்கனவே தமிழக அரசினால் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx  என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்ற விபரம் பொது மக்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo