Onetamil News Logo

காமராஜ் கல்லூரியில் காமராஜர் பிறந்த தினவிழா போட்டிகள் 

Onetamil News
 

காமராஜ் கல்லூரியில் காமராஜர் பிறந்த தினவிழா போட்டிகள் 


 தூத்துக்குடி 2019 ஜூலை 10 ; காமராஜரின் 117ஆவது பிறந்த தினவிழாவினை முன்னிட்டு காமராஜ் கல்லூரியில் தென்தமிழக கல்லூரிகளுக்கிடையேயான கலை, இலக்கியப் போட்டிகளும், தூத்துக்குடி மாவட்ட  பள்ளிகளுக் கிடையேயான கலை,  இலக்கியப் போட்டிகளும் நடைபெற்று வருகின்றது. 
பள்ளி மாணவ, மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி,பரதநாட்டியப் போட்டி,மற்றும் நாட்டுப்புறக்குழு நடனப் போட்டியும், கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் நாட்டுப்புறக்குழு நடனப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன.  பள்ளிகளுக்கான பரதநாட்டியப் போட்டியில் சக்தி விநாயகர் இந்துவித்யாலயா பள்ளி செ.வர்ஷா முதல் பரிசையும்,டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியின் ரா.கவிபிரியா இரண்டாம் இடத்தையும், புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியின் கே.யெஜோபாமுத்து மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.   
பள்ளிகளுக்கான பேச்சுப் போட்டியில் டாக்டர் சிவந்திஆதித்தனார் பள்ளியின் சா.டிக்ஷன் தேவதுரை முதல் பரிசையும்,சாகுபுரம் கமலாவதிசீனியர் செகன்டரிபள்ளியின் பே.சுபதர்ஷினி இரண்டாம் இடத்தையும், காயல்பட்டணம் எல்.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அ.ம.ராபியா சில்மியா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பள்ளிகளுக்கான நாட்டுப்புறக்குழு நடனப் போட்டியில் அபர்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் கோ.வனப்பிரியா, சா.ஸ்டெல்லாசின்ட்ரலா, க.மு.புவனேஸ்வரி, செ.மணிமாலா, கோ.பிரியதர்ஷனி முதல்பரிசையும், ஸ்டார் மெட்ரிக் பள்ளியின் ச.பாலவள்ளி, ரா.ரித்திகா, ரா.ஆரோக்கிய வின்சியா, ரா.நிவேதா,ப.ராகவி இரண்டாம் பரிசையும்,கமலாவதிசீனியர் செகன்டரிபள்ளி எஸ்.இருதயரோஹித், ஆர்.ராமகிருஷ்ணன்,டி.ஆதிசாமுவேல் முத்தையா, எஸ்.சுப ஸ்ரீதர்,ஏ.அஜய் சேகரன் மூன்றாம் பரிசையும் பெற்றனர். கல்லூரி மாணவர்களுக்கிடையேயானபேச்சுப்போட்டியில் திருநெல்வேலி ராணி அண்ணாஅரசுமகளிர் கல்லூரியின் மு.திவ்யாமுதல் பரிசையும், தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியின் கி.ரொக்ஸினா இரண்டாம் பரிசினையும், அம்மாண்டிவிளைபுனிதயோவான் கலைமற்றும் அறிவியல் கல்லூரியின் ஜா.அந்தோணி லிவ்யா மூன்றாம் பரிசினையும் பெற்றுள்ளனர். 
கல்லூரி மாணவர்களுக்கிடையேயான நாட்டுப்புறக்குழு நடனப்போட்டியில் புனிதமரியன்னைகல்லூரியின் வெ.ஜெயா தர்ஷினி,ர.அக்ஷயா பிரபாச.தீனலியோனிகா, இ.கன்னி சண்முகப்பிரியா,கி.முத்துப்பேச்சி குழுவினர் முதல்பரிசையும், கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மா.மாடத்தியம்மாள், மு.ஐஸ்வர்யலட்சுமி, அ.சுபாஷினி,க.சித்ரா, இரா.ராதிகாலட்சுமிகுழுவினர் இரண்டாம் பரிசினையும், கோவில்பட்டி கோ.வெ.நா.கல்லூரியின் க.மகாராஜா, ரா.ராகல், ஆ.சுபாஷ், செ.கருப்பசாமி, மு.பேச்சிமுத்து குழுவினர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.  15ம் தேதி அன்று  வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 
போட்டிகளை வணிகவியல் துறை தலைவர் முனைவர் கு.காசிராஜன் தலைமையில் முனைவர் மா.சிவபாக்கியம், மா.முரளிஒருங்கிணைப்பில் முனைவர் அ.சுபாஷினி, கோ.ராமலட்சுமி, மு.உம்மு ஜாஸ்மின், கூூ.ரெமோனா,த.பொன்ரதி,ஞா.வான்மதி,மற்றும் நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரிகள் முனைவர்.ஆ.தேவராஜ் பா.பொன்னுத்தாய் ஆகியோர் செய்துள்ளனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo