தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி ;உதவி பயிற்சி கலெக்டர் அணு துவக்கிவைத்தார்.
தூத்துக்குடி 2018 அக்டோ 2: தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் நடந்த மினி மாரத்தான் போட்டியை உதவி பயிற்சி கலெக்டர் அணு துவக்கிவைத்தார். இதில் திரளானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கான போட்டி தூத்துக்குடி பீச் ரோட்டில் இருந்தும், பெண்களுக்கான போட்டி ரோச் பூங்காவில் இருந்தும் துவங்கி காமராஜ் கல்லூரி வரை நடந்தது. இப்போட்டிகளை உதவி பயிற்சி கலெக்டர் அணு துவக்கிவைத்தார்.
இதில் ஆண்கள், பெண்கள் பிரிவில் முதலிடம் வென்றவர்களுக்கு 2 கிராம் தங்க நாணயமும், 2ம் இடத்தை வென்றவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயமும், 3ம் இடம் வென்றவர்களுக்கு அரை கிராம் தங்க நாணயம் வீதம் பரிசுகளை வழங்கினார். அத்துடன் மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் நாகராஜன், பழைய மாணவர்கள் ராஜ்குமார், தனபாலன், விரிவுரையாளர்கள் காசிராஜன், தேவராஜ், பழைய மாணவர் சங்கத் தலைவர் ரமேஷ்குமார், பொதுச் செயலாளர் விமல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.