Onetamil News Logo

குழந்தை உரிமை மீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் வரும் 17ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் ;கலெக்டர் தகவல்

Onetamil News
 

குழந்தை உரிமை மீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் வரும் 17ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் ;கலெக்டர் தகவல் 


 தூத்துக்குடி 2019 ஜூன் 13 ;தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் ஏதேனும் இருப்பின் அது குறித்த புகார்களை பொதுமக்கள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் 17.06.2019 தேதிக்குள் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது......தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் குழந்தை உரிமை மீறல்கள் மீதான அமர்வு 21.06.2019 அன்று ராமநாதபுரத்தில் வைத்து நடைபெறவுள்ளது. அவ்வமர்வி;ல் தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலகங்களிலும் குழந்தை உரிமை மீறல்கள் மீதான தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு நடைபெறுவது  குறித்து அறிவிப்பு வைக்கப்பட வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், விடுதிகள் , பயிற்சி நிறுவனங்கள், குழந்தைகள் இல்லங்கள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் அறிவிப்பு பலகையில் அறிவிப்பு செய்யப்படவும்  நிறுவனங்களின் இணையதளத்தில் அமர்வு குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்யப்படவும் வேண்டும். பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தின் போதும் பள்ளிகளில் நடைபெறும் காலை வழிபாட்டின் போதும் அமர்வு குறித்து தெரிவிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பெற்றோர்களுக்கு வாரம் ஒருமுறை விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் ஏதேனும் இருப்பின் அது குறித்த புகார்களை பொதுமக்கள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 176, முத்து சுரபி பில்டிங், மணிநகர், பாளை ரோடு , தூத்துக்குடி - 628 003 என்ற முகவரியில் இயங்கி வரும் அலுவலகத்தில் 17.06.2019 தேதிக்குள் தெரிவிக்கலாம். 21.06.2019 அன்று ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் குழந்தை உரிமை மீறல்கள் மீதான அமர்வின்போதும் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட எவரும் நேரில் தெரிவிக்கலாம். குழந்தை உரிமை மீறல்கள் குறித்து புகார் அளிப்பதில் சந்தேகம் ஏதேனும் இருப்பின்      0461-2331188 என்ற மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண்ணிலும் 9787002395, 9488068588 கைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். பெறப்படும் புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு 21.06.2019 அன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குழந்தை உரிமை மீறல்கள் மீதான அமர்வின்போது தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo