Onetamil News Logo

தூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை  வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட்டு ;பரபரப்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை  வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட்டு ;பரபரப்பு 


தூத்துக்குடி 2020 ஜூலை 5 ; தூத்துக்குடியில் இன்று வக்கீலுக்கு அருவாள் வெட்டு பலத்த காயம் அடைந்துள்ளார்.அவருக்கு தீவிர சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்..   
தூத்துக்குடி வடக்கு புறநகர் பகுதியான தாளமுத்துநகர் 2-வது தெருவைச் சேர்ந்த முருகேசன் இவரது மகன் கணேஷ் (35). இவர் தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோதி (28) தாயார் இளங்கனி (65). கணேஷ் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். கணேஷ்  வீட்டிற்கு பக்கத்தில் உள்ள வாடகை வீட்டிற்கு அப்பகுதியை சேர்ந்த இசக்கி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் அவர்களுக்குள் பல முறை தகராறு ஏற்பட்டு சண்டை நடத்துள்ளது.
இந்த நிலையில், கணேஷ் வீட்டிற்கு 13பேர் கொண்ட கும்பல் தீடீரெண்டு  கணேஷ் -யை , அவரது மனைவி ஜோதி மற்றும் தாயார் இளங்கனி ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு அவரது உள்ள  டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களையும், அவரது கார் கண்ணாடியும் அடித்து உடைத்து விட்டு தப்பித்து ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கணேஷ் அவரது மனைவி, மற்றும் தாயார் ஆகிய மூவரையும் போலீசார் மீட்டு  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்துள்ளனர்.இது குறித்து தலைமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 13 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo