Onetamil News Logo

தேசிய கால்நடைகள் நோய்; தடுப்பூசி திட்டத்தின் கீழ்  அனைத்து மாடுகளுக்கும் இலவசமாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி  – மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்

Onetamil News
 

தேசிய கால்நடைகள் நோய்; தடுப்பூசி திட்டத்தின் கீழ்  அனைத்து மாடுகளுக்கும் இலவசமாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி  – மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்


தூத்துக்குடி  2020 பிப்ரவரி 24  ;தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடைகள் நோய்; தடுப்பூசி திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு குறைவான கன்றுகள் மற்றும் கன்று ஈனும் பருவத்தில் உள்ள கால்நடைகள் தவிர அனைத்து மாடுகளுக்கும் இலவசமாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி 28.02.2020 முதல் 19.03.2020 வரை நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில்  தேசிய கால்நடைகள் நோய்; தடுப்பூசி திட்டத்தின் கீழ்  3 மாதங்களுக்கு குறைவான கன்றுகள் மற்றும் கன்று ஈனும் பருவத்தில் உள்ள கால்நடைகள் தவிர அனைத்து மாடுகளுக்கும் இலவசமாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி 28.02.2020 முதல் 19.03.2020 வரை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. 
கால் மற்றும் வாய் நோய் வைரஸ் என்னும் நச்சுக்கிருமியினால் ஏற்படுகிறது. நோய் பாதித்த கால்நடைகளில் வாய் மற்றும் கால் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதிக காய்ச்சலுடன் காணப்படும். இந்நோய் பாதித்த கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெரிதும் குறைவதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்நோயை முற்றிலும் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். தடுப்பூசி பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இனி வருங்காலங்களில் இத்திட்டத்தின் கீழ் 6 மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. தற்போது நடைபெறவுள்ள முதலாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி திட்ட பணியில் தவறாது அனைத்து மாட்டினங்களுக்கும் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு  விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo