Onetamil News Logo

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடியில் இந்து முன்னணி ஆலோசணை கூட்டம் ;கொரோனாவால் புதிய முடிவு

Onetamil News
 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடியில் இந்து முன்னணி ஆலோசணை கூட்டம் ;கொரோனாவால் புதிய முடிவு


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 13 ;தூத்துக்குடி மாநகர் மாவட்டம் இந்து முன்னணி தெற்கு மண்டலம்  சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் முத்தையாபுரத்தில் நடைபெற்றது.இந்து முன்னணி  மாவட்டச்செயலாளர் மாதவன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக  கொண்டாடுவது.மாநகர தெற்கு மண்டலம் முத்தையாபுரம் வட்டாரத்தில் 23 விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவது.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஒரு வாரம் வரை விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு அதன் பின்பு ஊா்வலமாக சென்று கடற்கரை அல்லது ஆற்றங்கரையில் கரைக்கப்படும்.
ஆனால் இந்த வருடம் கொரனா வைரஸ் தொற்று நோய் உலக அளவில் அச்சுறுத்தி வருவதால் அரசு சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு,
நாம் நோய்கள் தொற்று பரவாமல் இருக்க விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களை இந்து முன்னணி சார்பாக நடத்தக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே விநாயகர் சதுர்த்தி விழா தினமான வருகிற 22-ஆம் தேதி அன்று சிலை வைக்கப்பட்டு அன்று மாலையே கரைக்கப்படும் என்று மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார் 
அதற்கேற்ப விழாவை நடத்துவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடா்ந்து ஆண்டு தோறும் விநாயகா் சதூா்த்தியை முன்னிட்டு காப்பு கட்டுவது போல் இந்த ஆண்டும் நாளை 14ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெறும்.இதில் ஒன்றிய கிளை கமிட்டி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்து.
கூட்டத்தில் விநாயகர் சிலை கமிட்டி பொறுப்பாளர்கள் இந்துமுன்னணி மண்டல செயலாளர் பாலுமாணிக்கம்  பாரதிராஜா,  ஜெய்கிருஷ்ணன், அபிஷேக் ,மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனா்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo