Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் ;மதுபாட்டில்கள் பறிமுதல் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் ;மதுபாட்டில்கள் பறிமுதல் 


தூத்துக்குடி 2020 அக்டோபர் 26 ;தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 
முறப்பநாடு காவல் நிலையம் ;
முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார் 25.10.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கலியாவூர் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த  சங்கரபாண்டி மகன் மகாராஜன் (29) என்பவர் தனது வீட்டின் பின்பக்கத்தில் வைத்து சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ராஜா ராபர்ட் வழக்கு பதிவு செய்து மகாராஜனை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 52 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.     

திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் ;                                           திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுவாமி தலைமையிலான போலீசார் 25.10.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திருச்செந்தூர், வீரராகவபுரம்   பகுதியில், அதே  பகுதியை சேர்ந்த  சங்கரன் மகன் சரவணகுமார் (37) என்பவர் தனது வீட்டின் பின்பக்கத்தில் வைத்து சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர்  ஜஸ்டின் சாமுவேல்ராஜ் வழக்கு பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 29 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.   
 தட்டார்மடம் காவல் நிலையம் ;
தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  அய்யப்பன் தலைமையிலான போலீசார் 25.10.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, முதலூர் ஜங்ஷன் பகுதியில், கடாக்ஷபுரம், ஆலடிதட்டு  பகுதியை சேர்ந்த  ராமசாமி மகன் திருமணி (48) என்பவர் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  அய்யப்பன் வழக்கு பதிவு செய்து திருமணியை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 23 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
தாளமுத்து நகர் காவல் நிலையம் ;                                                                    தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா தலைமையிலான போலீசார் 25.10.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தாளமுத்துநகர் பஜார் பகுதியில் தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த தங்கசாமி மகன் ஜெயமுருகன்(71) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா வழக்கு பதிவு செய்து ஜெயமுருகனை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo