Onetamil News Logo

தூத்துக்குடியில் 3 வகையிலான காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்  என மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தகவல்

Onetamil News
 

தூத்துக்குடியில் 3 வகையிலான காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்  என மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தகவல்


தூத்துக்குடி 2019 டிசம்பர் 4 ;தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக முன்று வகையிலான பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுமெனவும், தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக அமுலுக்கு வருகிறதெனவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் இன்று (02.12.2019) அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், கிராம ஊராட்சிகளில், ஊராட்சி தலைப்பின் கீழ் காலியாக உள்ள 10 ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தகுதியுள்ள நபர்களிடமிருந்து 09.11.2019 முதல் 22.11.2019 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 09.12.2019 அன்று நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தெரிவித்து அழைப்புக்கடிதம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலிருந்தும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் 02.12.2019 முதல் அமுலுக்கு வருவதன் காரணமாக 09.12.2019 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நேர்முகத் தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. 
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அரசுத் தலைப்பின் கீழ் காலியாகவுள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தகுதியுள்ள நபர்களிடமிருந்து 11.11.2019 முதல் 26.11.2019 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவ்விண்ணப்பங்கள் 04.12.2019 வரை கூர்ந்தாய்வு செய்ய வேண்டிய நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஊராட்சி ஒன்றியங்களில், ஊராட்சி ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவது தொடர்பாக 18.11.2019 முதல் 02.12.2019 வரை தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
மேற்படி 3 வகையிலான காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo