Onetamil News Logo

சக்தி வித்யாலயாவில் சமத்துவ பொங்கல் விழா

Onetamil News
 

சக்தி வித்யாலயாவில் சமத்துவ பொங்கல் விழா



தூத்துக்குடி 2019 ஜனவரி 13 ;தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளியின் நிறுவனர் சு.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோலப் போட்டி, ஓவியப் போட்டி நடைபெற்றது. கோலப் போட்டிக்கு யுஆமு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை ஆனந்தசெல்வி மற்றும் பள்ளி ஆசிரியை பியூலா கெப்சி, சுபலெட்சுமி ஆகியோர் தேர்வாளர்களாக வந்து தேர்வு செய்தனர்.
மாணவ, மாணவிகள் தமிழ்நாடு பாரம்பரியத்தை காக்கும் நோக்கத்தில் வேஷ்டி-சட்டை, பாவாடை-தாவணியில் பள்ளிக்கு வந்து பொங்கல் வைத்தனர்.
கோலப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்பின் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் யு.ஜெயாசண்முகம் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo