Onetamil News Logo

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இன்று சுமார் 50000 ஆயிரம் தொழிலாளர்கள் தூத்துக்குடியில் வேலை இழந்து வருமானமின்றி வாடுகிறார்கள் ;சமூக ஆர்வலர் கணேசன் செய்திக்குறிப்பு

Onetamil News
 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இன்று சுமார் 50000 ஆயிரம் தொழிலாளர்கள் தூத்துக்குடியில் வேலை இழந்து வருமானமின்றி வாடுகிறார்கள் ;சமூக ஆர்வலர் கணேசன் செய்திக்குறிப்பு


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 15 ;தூத்துக்குடி தெப்பக்குளம் சமூக ஆர்வலர் K. கணேசன் அனுப்பியுள்ள செய்திக்குறிபில் கூறியதாவது..
அனைத்து அரசியல்  கட்சி தலைவர்களுக்கு, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளாதவது...
தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு உடல்நலக்கேடு ஏற்பட்டுள்ளதாக இதுவரை எந்தவித ஆய்வறிக்கையிலும் இடம் பெறவில்லை. ஆதாரங்களும் இல்லை. எனவே தான் இந்த ஆலைகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனினும் சமூக ஊடகங்களின் மூலம் ஏற்பட்ட  வதந்தியின் காரணமாக கடந்ததாண்டு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் அதை தொடர்ந்து நடைபெற்ற விரும்பதகாத சம்பவத்தால் நமது சொந்தங்கள்,நண்பர்கள் 13 பேரை நாம் இழந்து தவிக்கிறோம்.
ஆனால் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இன்று சுமார் 50000 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி வாடுகிறார்கள்.
ஆலையின் ஒப்பந்த தொழிலாளர்கள்,லாரி போக்குவரத்து தொழிலாளர்கள் (நாளொன்றுக்கு 400 லாரிகளில் போக்குவரத்து) துறைமுகத்தில் சரக்கு ஏற்றுமதி,இறக்குமதி தொழிலாளர்கள், மற்றும் சார்பு ஆலையை சார்ந்த பிற தொழிலாளர்கள் என 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் அதை சார்ந்த சிறு,குறு தொழில் நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அவர்கள் மட்டுமின்றி அவர்களை சார்ந்த குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்வாதாரமின்றி வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் தங்களது வேதனைகளை வெளியே சொல்லக்கூட முடியாத சூழ்நிலை உள்ளது. நாட்டின் பொருளாதாரமும் தொழில் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளன.தூத்துக்குடி பகுதி மக்கள்,சிறு வியாபரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் போராட்டத்தின் விளைவுகளையும் அதன் விபரீதங்களையும் கண்டு இன்று வருத்தபடுகிறார்கள்.
எனவே தமிழகத்தின் மரியாதைக்குரிய அனைத்து கட்சி தலைவர்களையும் தூத்துக்குடி வாக்காளர்கள் சார்பாக பணிவோடு கேட்டுக்கொள்வது என்ன என்றால்..
“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”- என்ற குறள் மொழிக்கேற்ப
தயவு செய்து பிரச்சனையின் மறுபக்கத்தையும் கருணையோடு பரிசீலியுங்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை அரசியலாக்காதீர்கள். அதனை ஒரு தொழிலாக நாட்டிற்கு வேலைவாய்ப்பு மற்றும் வளம் தரும் தொழிற்சாலையாக  மட்டுமே பாருங்கள், பெருகிவரும் தொழில்நுட்ப உதவியுடன் எந்த அளவுக்கு மேலும் பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் ஆலையை செயல்படுத்த முடியும் என்று சிந்திப்போம். அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் வசம் உள்ள ஆலோசனைகளையும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்து நல்ல தீர்ப்பு பெறுவோம்.
நமது மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நாட்டு நலனுக்கும் முன்னுரிமை கொடுத்து மதிப்புமிகு அரசியல் கட்சி தலைவர்கள் இதனை தேர்தல் வாக்குறுதியாக அல்லது கௌரவப்பிரச்னையாக கருதாமல் அயிவியல் அடிப்படையில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண ஒத்துழைப்பு கொடுக்க அதில் அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo