Onetamil News Logo

கல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை ; 9 டி.எஸ்.பி.கள் உள்பட தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1000 போலீசார் குவிப்பு 

Onetamil News
 

கல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை ; 9 டி.எஸ்.பி.கள் உள்பட தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1000 போலீசார் குவிப்பு 


தூத்துக்குடி  2020 மே 30 ;தூத்துக்குடி தனியார் கல்லூரி மாணவர் கிராமத்தில் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்,ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் இவரது மகன் சத்தியமூர்த்தி (20) தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று இவர் அப்பகுதியில் உள்ள ஒளி கோயில் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனிடையே அப்பகுதி மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் கொல்லப்பட்டுக் கிடந்த இடத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் சத்தியமூர்த்தி தலை கிடந்தது. அதனை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், துண்டிக்கப்பட்ட சத்தியமூர்த்தி தலையை தேடி மீட்க வேண்டும் என கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அங்குள்ள சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பால கோபாலன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து நள்ளிரவில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.பின்னர் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தலைவன்வடலி கிராமத்திற்கும்,கீழகீரனூர் கிராமத்திற்கும் உள்ள பகை என்ன? வேறு ஏதேனும் பிரச்சினையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இதற்கிடையே கீழகீரனூரை சேர்ந்த சில வீடுகளை ஒரு கும்பல் சூறையாடியது.அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க கூடுதல் எஸ்.பி. குமார், 9 டி.எஸ்.பி.கள் உள்பட தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo