Onetamil News Logo

சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் “கல்வி தொலைக்காட்சி” எனும் 24 மணி நேர சேனல் சோதனை ஒளிபரப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி  ஆய்வு

Onetamil News
 

சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் “கல்வி தொலைக்காட்சி” எனும் 24 மணி நேர சேனல் சோதனை ஒளிபரப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி  ஆய்வு


தூத்துக்குடி 2019 ஜூலை 12 ; தூத்துக்குடி சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் “கல்வி தொலைக்காட்சி” எனும் 24 மணி நேர சேனல் சோதனை ஒளிபரப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி  ஆய்வு செய்தார்கள்.
தழிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் தமிழக மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக “கல்வி தொலைக்காட்சி” எனும் 24 மணி நேர சேனல் விரைவில் தொடங்கப்படவுள்ளது. அதற்கான சோதனை ஒளிபரப்பு TAC TV-யில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாகிறது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் 03.07.2019 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, முதற்கட்டமாக 87 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் TAC TV செட் டாப் பாக்ஸ்களை வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு TAC TV-நிறுவனம் இணைப்பு வழங்கி வருகிறது.
இன்று (12.07.2019) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி TAC TV இணைப்பு வழங்கப்பட்ட சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் “கல்வி தொலைக்காட்சி ” சோதனை ஒளிபரப்பை நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo