Onetamil News Logo

வாழைகளுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும்,இளைஞர் காங்கிரசார் கலெக்டரிடம் கோரிக்கை

Onetamil News
 

வாழைகளுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும்,இளைஞர் காங்கிரசார் கலெக்டரிடம் கோரிக்கை


தூத்துக்குடி, 2019 ஆக.20: தாமிரபரணி பாசனத்தில் வாழைகளுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி இளைஞர் காங்கிரசார் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சகாயராஜ் தலைமையில், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஸ்டாலின், மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவி முத்துவிஜயா, மாநகர இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பெனில், எஸ்.சி.எஸ்.டி.பிரிவு தலைவர் ராஜாராம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மச்சேந்திரன் ஆகியோர்  கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்து வருவதால் மாவட்டத்தின் வடபகுதிகளில் மானாவாரி விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேநேரத்தில், மாவட்டத்தின் தென்பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் பாசனத்தை நம்பி நெல், வாழை, வெற்றிலை போன்ற விவசாய சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாமிரபரணி பாசனத்தில் மருதூர் அணையின் மேலக்கால்&-கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால்&தென்கால் பாசனத்தை நம்பி 46ஆயிரத்து 107ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகிறது.
தாமிபரணி ஆற்றின் பாசனத்தை பொறுத்தவரை ஆற்று தண்ணீரை பொதுப்பணித்தறையினர் விவசாயத்திற்கு வழங்காமல் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கி வருவதால் விவசாயப்பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு விவசாயிகள் மூன்றுபோக நெல் சாகுபடி செய்யமுடியாமல் கடனாளிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அரசின் பாராமுகத்தால் நெல் சாகுபடி குறைந்து போன நிலையில், வாழை சாகுபடி அதிகரித்து வருகிறது. கலியாவூரில் இருந்து சேர்ந்தபூமங்களம் வரையிலும் வாழைசாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்டசூழலில், கடந்த மே மாதத்தில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் கிடைக்காமல் பலகோடி ரூபாய் மதிப்பிலான வாழைகள் தண்ணீரின்றி காயந்து கருகி வருகின்றன. தாமிரபரணி பாசனக்கால்வாய்களில் கடந்த 5மாதங்களாக விவசாயத்திற்கு என்று தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

இதனால், வாழை விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகையசூழ்நிலையில் தற்போது அணைப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. 
மழை தொடருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 109அடியை கடந்து விட்டது. இதுபோன்று, மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துகொண்டே தான் வருகிறது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட அணைகளில் போதுமான அளவிற்கு தண்ணீர் இருப்பில் உள்ளதால், தாமிரபரணி பாசனத்தில் தண்ணீரின்றி காயந்து கருகி வரும் வாழைகளை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo