Onetamil News Logo

தூத்துக்குடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேட்டி ;சுப்பிரமணியன் சுவாமியின் தனிப்பட்ட கருத்துகளுக்கு பதில் சொல்லமுடியாது ;வீடியோ இணைப்பு

Onetamil News
 

தூத்துக்குடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேட்டி ;சுப்பிரமணியன் சுவாமியின் தனிப்பட்ட கருத்துகளுக்கு பதில் சொல்லமுடியாது ;வீடியோ இணைப்பு 


தூத்துக்குடி 2018 செப் 13 ;தூத்துக்குடியில்  சக்திகேந்திரம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த  அவர் கூறியதாவது...
மகாத்மா காந்தி அவர்களின் 150 வைத்து பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுத்தம் சுகாதாரத்தை முழுமையாக கொண்டு வரவேண்டும் என்று  நாடு முலுவதும் கழிப்பறையை முலுமையாக கட்டி முடித்து சுகாதாரத்தை பேணவேண்டும்,குப்பையை இங்குதான் போடா வேண்டும்,தூய்மை என்பது உணர்ச்சி ,உணர்வு என்பதை மேலோங்கச் செல்ல வேண்டும்,அம்புக்குறி இட்டு இதில் எச்சில் துப்ப வேண்டும்,என்கின்ற நிலைப்பாடை உருவாக்க வேண்டும் அக்டோபர் 2 ம் தேதி ஒரு பேரியக்கத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். 2019 நாடுளுமன்ற தேர்தலை தொடங்கிவிட்டோம், பாஜக தலைவர் அமித்சா தமிழ்நாட்டில் பல்வேறு தயாரிப்புகளை வகுத்து கொடுத்துள்ளார். அதன்படி வந்துள்ளேன். தூத்துக்குடியில்  சக்திகேந்திரம் நிகழ்ச்சியில் பங்கேற்க  இன்று எந்த ஒரு அரசியல் தலைவர்களையும் விமர்சனம் செய்ய உரிமை இருக்கிறது. கூட்டணி என்பது முடிவாகவில்லை 
இல.கணேசனிடம் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தொடர்பான கேள்விகளை கேட்டபோது, சுப்பிரமணியன் சுவாமியின் தனிப் பட்ட கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாது, அவர் தவிர்த்த கேள்வி களை மட்டும் கேட்கவும் என்றார்.
தொடர்ந்து அவர் மேலும் கூறியது: விஜய் மல்லையா கூறும் கருத்துக்களில் உண்மை இல்லை ,
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் காலம் கனிகின்ற பொழுது  பா.ஜ., தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்றார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எங்களுக்கும் வருத்தத்தை அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் விலை உயர்த்தப்பட்டது. உலக அளவில் கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் டாலரின் மதிப்பு உயர்வு காரணமாக தற்போது விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஒரு குழு அமைத்துள்ளார். அந்த குழு வருகிற 15-ந்தேதி விசாரணை நடத்துகிறது. ஒரு சில பொருட்களுக்கு மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் 25 சதவீத விலை குறையும். இதுகுறித்து மத்திய அரசு சில மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்டால் பெட்ரோல் விலை ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வரப்படும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று கேட்கிறார்கள். தேர்தலுக்குள் பெட்ரோல், டீசல் விலை குறையும் என நம்புகிறோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும். விரைவில் கச்சா எண்ணை விலை குறையும் பொழுது பெட்ரோல், டீசல் விலையும் குறையும் இவ்வாறு அவர் கூறினார். 

அவருடன்,மாவட்ட தலைவர் பாலாஜி ,கனகராஜ்,வக்கீல் சந்தனகுமார் ,சிவராமன்,   உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo