Onetamil News Logo

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ;மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

Onetamil News
 

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ;மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 


தூத்துக்குடி,2019 ஆக.22:தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பொருளாதார நிபுணருமான ப.சிதம்பரம் நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்த அரசியல் பழிவாங்கும் போக்கினை கண்டித்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்தார்.  முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டேவிட் பிரபாகரன், சவரியானந்தம், மாவட்ட தலைவர் ஏடிஎஸ் அருள் உட்பட பலர்  கலந்து கொண்டனர். இதில் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo