Onetamil News Logo

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற பசிபிக் ஏசியன் சர்வதேச அளவிலான யோகா போட்டியில் முதலிடம் தூத்துக்குடி எஸ்.பி.முரளி ரம்பா, சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Onetamil News
 

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற பசிபிக் ஏசியன் சர்வதேச அளவிலான யோகா போட்டியில் முதலிடம்  தூத்துக்குடி எஸ்.பி.முரளி ரம்பா, சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  


தூத்துக்குடி 2019 ஜூன் 13 ; தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற பசிபிக் ஏசியன் சர்வதேச அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்;காணிப்பாளர் முரளி ரம்பா, சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
 
கடந்த  18.05.2019 மற்றும் 19.05.2019 ஆகிய இரு நாட்கள் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் கைநான் ஸ்டேடியத்தில் பசிபிக் ஏசியன் சர்வதேச யோகா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து 137 மாணவர்கள கலந்து கொண்டனர்.
                                                                                                                                         தமிழ்நாட்டின் சார்பாக இந்தியா பயிற்சிக் கழகத்தின் சார்பாக கோவில்பட்டியிலிருந்து இப்போட்டியில் 15 முதல் 18 வயதுடைய பிரிவில் கலந்து கொண்ட கயத்தாறு பள்ளியில் பயிலும் 10வது வகுப்பு மாணவி  மதுபாலா என்பவர் தடகள யோகாவில் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளார்.
                                                                                                                                           12 முதல் 15 வயதுடைய பிரிவில் கலந்து கொண்ட  கோவில்பட்டியில் 7வது வகுப்பு பயிலும் மாணவர் சவுரி ராஜன் நடன யோகாவில் முதலிடத்தை பிடித்து தங்கமும், தடகள யோகா போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்.  
                                                                                                                                         10 முதல் 12 வயதுடைய பிரிவில் கலந்து கொண்ட கயத்தாறு பள்ளியில் 7வது வகுப்பில் பயிலும் மாணவர் கௌசிக் தடகள யோகாவில் 2வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கமும்,  மாணவர் சுபாஷ் என்பவர் 3வது இடத்தைப்பிடித்து வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.  
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,  பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo