Onetamil News Logo

ரூ.3.35 கோடி மதிப்பில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரம் சேமிப்பு கிடக்கு கட்டட பணிக்கான பூமி பூஜை 

Onetamil News
 

ரூ.3.35 கோடி மதிப்பில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரம் சேமிப்பு கிடக்கு கட்டட பணிக்கான பூமி பூஜை 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 14 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ரூ.3.35 கோடி மதிப்பில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரம் சேமிப்பு கிடக்கு கட்டட பணிக்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தலைமையில் நடைபெற்றது.
      தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ரூ.3.35 கோடி மதிப்பில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரம் சேமிப்பு கிடக்கு கட்டட பணிக்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (14.02.2020) நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
      இந்திய தேர்தல் ஆணையம், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திட சேமிப்பு கிடக்கு கட்டம் அமைக்க தெரிவித்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரம் சேமிப்பு கிடக்கு கட்டடம் ரூ.3.35 கோடி மதிப்பில் 988.90 சதுர மீட்டர் அளவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.        
      இந்த கட்டடத்தில் தரைத்தளத்தில் பயிற்சி அறை, அலுவலக அறை, பாதுகாப்பு அறை மற்றும் வாக்குச்சீட்டு அலகு இயந்திரம் சேமிப்பு அறை வசதிகளும், முதல் தளத்தில் கட்டுப்பாட்டு பிரிவு இயந்திரம் சேமிப்பு அறை மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை இயந்திரம் சேமிப்பு அறை வசதிகளும் செய்யப்பட உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்க போதுமான அளவில் இந்த கிடக்;கு உள்ளது என தெரிவித்தார். 

      இந்த நிகழ்ச்சியில் தேர்தல் வட்டாட்சியர் நம்பிராஜர்;, பொதுபணித்துறை (கட்டடம் மற்றும் கட்டுமானம்) செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர்கள் வெள்ளச்சாமிராஜ்,ராமலிங்கம், உதவி பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், வித்யசாகர், அலுவலர்கள்; கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo