தென்பாகம் காவல் நிலைய பகுதியில் இன்று கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கைது
தூத்துக்குடி 2020 டிசம்பர் 4 ;தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய பகுதியில் இன்று கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி மகன் அமலின் என்ற ஹிட்லர் (31). இவருக்கும் தாளமுத்துநகர் பாரதியார் நகரை சேர்ந்த சுனைராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அமலின் என்ற ஹிட்லர் மற்றும் இவரது உறவினரான தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, வாடி தெருவைச் சேர்ந்த ராமர் மகன் சண்முகவேல் (45) ஆகியோர் 01.12.2020 அன்று தூத்துக்குடி வண்ணார் 1வது தெருவில் சுனைராஜிடம் பேசுவதற்காக சென்றபோது சுனைராஜின் மகன்களான தூத்துக்குடி, தாளமுத்துநகர், பாரதி நகரைச் சேர்ந்த மதன்குமார்(27), தாளமுத்துநகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கவிஜய் (30), மற்றும் அவர்களது நண்பர்களான தூத்துக்குடி கீதா ஜீவன் நகரைச் சேர்ந்த திருமாள் தம்பி மகன் பாலமுருகன்(26) மற்றும் தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் தர்மராஜ் (20) ஆகிய 4 பேர் சேர்ந்து அமலின் என்ற ஹிட்லர் மற்றும் சண்முகராஜ் ஆகியோரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அமலின் என்ற ஹிட்லர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்கு பதிவு செய்து எதிரிகள் 4 பேரையும் கைது செய்தார்.