Onetamil News Logo

டிஜிட்டல் பேனர்கள் வைக்க கலெக்டர்  அனுமதி பெற வேண்டும் - உரிய அனுமதி பெறாதவர்கள்மீது கடும் நடவடிக்கை  கலெக்டர்     

Onetamil News
 

டிஜிட்டல் பேனர்கள் வைக்க கலெக்டர்  அனுமதி பெற வேண்டும் - உரிய அனுமதி பெறாதவர்கள்மீது கடும் நடவடிக்கை  கலெக்டர்       


தூத்துக்குடி 2019 செப் 14 ; தூத்துக்குடி மாவட்டத்தில் பேனர்கள் வைக்க கண்டிப்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்  அனுமதி பெற வேண்டும் - உரிய அனுமதி பெறாதவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர்  செய்திக்குறிப்பில் கூறியதாவது... சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதியின்றி மாநகர / மாவட்ட பகுதிகளில் தனியார், அரசு நிலம் மற்றும் கட்டிடம், சாலைகள், மைதானங்கள் உள்ளிட்ட பொதுவெளிகளில் பொதுமக்கள், சாலை பயன்பாட்டாளர், பாதசாரிகள் ஆகியோருக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் விளம்பரம், வரவேற்பு பதாகைகள் மற்றும் தட்டிகள் அமைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, அனுமதியின்றி விளம்பர, வரவேற்பு பதாகைகள் மற்றும் தட்டிகள் அமைத்தல் சட்டத்திற்கும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் று.P.ழே.33819/2018 முதலானவற்றில்  வழங்கப்பட்டுள்ள 19.12.2018ந் தேதிய ஆணைகளுக்கும், நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு எண்.61/2019-ன்மீது பிறப்பிக்கப்பட்டுள்ள 07.08.2019ந் தேதிய ஆணைகளுக்கும் எதிரானதாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விதிமுறைகள் தூத்துக்குடி மாவட்டத்திலும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 
எனவே பொதுமக்கள் தங்களது வீட்டு பொது அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கு விளம்பர பலகைகள் வைக்க விரும்புபவர்கள் அரசால் வரையறை செய்யப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து, டிஜிட்டல் பேனர் வைக்கும் இடத்தின் எல்கைகளுக்குட்பட்ட காவல் நிலையம் வாரியாக தனித்தனியாக எத்தனை நாட்களுக்கு (அதிகபட்சம் 6 நாட்கள்), எவ்வளவு எண்ணிக்கையில், எத்தனை அளவுகளில் பேனர் வைக்கப்படவுள்ளது என்ற விபரங்களுடன் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சமர்ப்பித்திட வேண்டும். 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், அனைத்தும் சட்ட விரோதமானவை எனத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து வகையிலும் சரியாக பூர்த்தி செய்தும் உரிய அலுவலரிடம்  பெறப்பட்ட தடையின்மை சான்றுகளை இணைத்தும் மனுவினை சமர்பிக்கும் பட்சத்தில் மனு செய்த 48 மணி நேரத்திற்குள் மாவட்ட ஆட்சியரின் உரிய அனுமதி வழங்கப்படும். அவ்வாறான உரிய அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் மற்றும் தட்டிகள் வைத்திடும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி குற்றமிழைப்போர் மீது ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கிட வழிவகை உள்ளது என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது. 
எனவே இத்தகைய சட்ட விரோத செயல்களில் எவரும் ஈடுபடக்கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo