Onetamil News Logo

 திரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்சி 

Onetamil News
 

 திரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்சி 


தூத்துக்குடி 2020 ஜூலை 6 ;தூத்துக்குடியில் மீனவ மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றான திரேஸ்புரத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் வீட்டிற்கு ஒருவர் என பரிசோதனை செய்யப்பட்டது.  அதன் பரிசோதனை முடிவு நேற்று இரவு தெரிய வந்தததில், இப்பகுதியை சார்ந்த 26 நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 26 நபர்களுக்கும் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை எனவும், பரிசோதனை செய்ததில் தொற்று கணடுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மீதமுள்ள நபர்களுடைய பரிசோதனை முடிவுகள் இன்று மாலை தெரியவரும்.ஒரு பகுதியில், ஒரே நாளில் கொரோனா தொற்று 26 நபருக்கு பாசிட்டிவ் வந்ததால் அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்களால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, யாரும் செல்லாதவாறு  அடைக்கப்பட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திரேஸ்புரம் பகுதியில் நேரில் ஆய்வு செய்தார்.  தொற்று மேலும் பரவாமல் இருக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆனணயாளரிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆட்சியர்,  கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்தும், பரவாமல் தடுப்பது குறித்தும் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறினார்.  ஆய்வின்போது துணை ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், டி.எஸ்.பி கணேஷ் , மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் , வடபாகம் காவல் ஆய்வாளர் அருள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo