Onetamil News Logo

பள்ளி,கல்லூரிகளில் கஞ்சா விற்று செல்போன் வாங்கும் மாணவர்கள் ;அதிர்ச்சி ரிப்போர்ட் 

Onetamil News
 

பள்ளி,கல்லூரிகளில் கஞ்சா விற்று செல்போன் வாங்கும் மாணவர்கள் ;அதிர்ச்சி ரிப்போர்ட் 


தூத்துக்குடி, 2019 செப் 16 ; தென் மாவட்டங்களில் இன்று பள்ளி,கல்லூரிகளில் கஞ்சா விற்று செல்போன் வாங்கும் மாணவர்கள் பெருகிவிட்டனர்.இது குறித்து ஒரு சர்வே செய்த பொழுது அதிர்ச்சி ரிப்போர்ட் தான் காத்திருந்தது.      
இளைஞர்கள் கையில் தான் வருங்கால நாடு இருக்கிறது.ஆனால் இன்றைய இளைஞர்கள் கையில்,மது கோப்பை,கஞ்சா,பான்பராக்,போதை ஊசிகள்,பீடி,சிகரெட்,இப்படி உடலை கெடுக்கும் அனைத்தும் போதைகளும் மாணவர்கள் மத்தியில் புகுந்து விட்டது தான் வேதனையான விஷயம்,பெற்றோர்கள் ஒரு பொருளை வாங்கி தரவில்லையென்றால் அதை எப்படியாவது வாங்க வேண்டும் என்று மாணவர்கள் தவறான வழிக்கு செல்கின்றனர். இல்லையென்றால் தங்களை மாய்த்து கொல்கிறார்கள்.            
உதாரணம் ; 
திருவட்டார் அருகே மேக்கா மண்டபம் பரவகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். இவருடைய மனைவி சாஜினி (வயது 34). இவர்களுக்கு வர்ஷா (17) என்ற மகளும், கிஷோர் (15) என்ற மகனும் இருந்தனர். கிறிஸ்துராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கணவர் இறந்த பிறகு, சாஜினி வேறொருவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வருகிறார்.இதன் காரணமாக கிறிஸ்துராஜ் தாயான ரோஸ்மேரியின் (60) பராமரிப்பில் கிஷோரும், வர்ஷாவும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கிஷோர் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றான். கிஷோர் பாட்டியிடம் புதிய செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளான். அதற்கு அவர் வாங்கி தருவதாக சொல்லி காலம் தாழ்த்தியுள்ளார். ஒரு கட்டத்தில் செல்போன் வாங்கி தர மாட்டேன் என்று பாட்டி கூறியதால் மாணவன் கிஷோர் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். 
மற்றொரு சம்பவம் ;                                                                                                                  
சுசீந்திரம் அருகே வண்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் அஜய்(வயது 18). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், இவர் சரியாக கல்லூரிக்கு செல்லாம் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அஜய் தனது பெற்றோரிடம் புதிய செல்போன் வாங்கித்தருமாறு கேட்டு வந்தார். ஆனால், பெற்றோர் செல்போன் வாங்கி கொடுக்காமல் இருந்து வந்தனர். பெற்றோர் செல்போன் வாங்கி கொடுக்காததால் அஜய் மணமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜய் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். 
இது போன்று செல்போன் வாங்குவதற்கு, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மாணவர்கள் வழித்தப்பி செல்லுகின்றனர். தூத்துக்குடி பள்ளி கல்லூரிகளில் கஞ்சா விற்க்கப்படுவதாக மாணவர்களே கூறும் அவல நிலை உருவாகி வருகிறது.  தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி விடுதியில் 1 கிலோ கஞ்சா எடுத்துள்ளனர்.ஆனால் அவற்றை வெளியில் சொல்லாமல் விடுதி காப்பாளர்கள் மறைத்து உள்ளனர்.இது போன்று ஒவ்வொரு விடுதிகளிலும் மாணவர்கள்,மாணவியர்கள் பாதிக்கப்டுவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. தூத்துக்குடியில் லட்சம் ரூபாய்க்கு மாணவர்கள் மூலம் கஞ்சா விற்கப்படுகிறது.காரணம் மாணவர்களின் அறியாமையால் இது போன்ற தவறான வழிகளில் வழி நடத்தப்டுகின்றனர்.இன்றைய சூழ்நிலையில்   வேலை  வாய்ப்பின்மை இல்லாதது ஒரு காரணமாகும், கின்ஸ் அகாடமியில் இலவசமாக பயிலும் மாணவர்கள் 95 சதவீதம் பேர்  பகுதி நேரமாக ஹோட்டலில் வேலை செய்தும் படிக்கின்றனர். இது போல பள்ளி, கல்லூரியில் பயிலும் 30 சதவீதம் மாணவர்கள்  பகுதி நேரமாக கடைகளில் வேலை செய்தும் படிக்கின்றனர். 30 சதவீதம் மாணவர்கள் வசதி படைத்தவர்கள்,40 சதவீதம் மாணவர்கள் வழித் தப்பி செல்லுகின்றனர். இவர்களுக்கு சரியான வழியை ஆசிரியர்கள் தான் அறிவுரைகளைக் கூறி உங்களை நம்பி தான் இந்த நாடு இருக்கிறது என்று அறிவுரை கூறி நடத்த வேண்டும். அப்பொழுது தான் புதிய சமுதாயத்தை படைக்க முடியும்.     
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo