Onetamil News Logo

நடிகை பானுப்ரியா வீட்டுக்கு வேலைக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ;தூத்துக்குடியில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஜனநாயக உழைக்கும் பெண்கள் இயக்கத்தினர் கலெக்டர்-யிடம் புகார்

Onetamil News
 

நடிகை பானுப்ரியா வீட்டுக்கு வேலைக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு;தூத்துக்குடியில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஜனநாயக உழைக்கும் பெண்கள் இயக்கத்தினர் கலெக்டர்-யிடம் புகார்  



தூத்துக்குடி 2019 ஜூன் 11 ;நடிகை பானுப்ரியா வீட்டுக்கு வேலைக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  வீட்டில் வேலைபார்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தூத்துக்குடி கலெக்டர் யிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                                                              இது குறித்து தூத்துக்குடியில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஜனநாயக உழைக்கும் பெண்கள் இயக்கத்தினர் கலெக்டர்-யிடம் புகார் தெரிவித்துள்ளனர்.                                                                                                     அதில் கூறியதாவது.......தென்னிந்திய சினிமாவில் நூற்றுக்கணக்ககான படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பானுப்பிரியா. திருமணத்திற்கு பிறகு குணச்சித்திர நடிகையாக உருவெடுத்த பானுப்பிரியா சில படங்களில் அம்மா வேடங்களிலும் நடித்தார்.
கடைசியாக 'சிவலிங்கா', 'மகளிர் மட்டும்' ஆகிய படங்களில் நடித்த அவர், தொலைக்காட்சி சீரியல்களில் நாயகியாகவும் நடித்து வந்தார்.
இந்தநிலையில் திரைப்பட நடிகை பானுப்பிரியாவின் வீட்டில் வேலைபார்க்கும் 14 வயது சிறுமியின் தாய் பிரபாவதி, பானுப்பிரியா மீது ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் “பொருளாதார ரீதியாக மிகவும் கீழ்நிலையில் இருக்கும் நான் என்னுடைய மகள் 14 வயது சந்தியாவை திரைப்பட நடிகை பானுப்பிரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தேன். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து என் மகளை அவர்கள் அழைத்து சென்றனர்.
ஆனால் கடந்த 18 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை. சமீபத்தில் வேறு ஒருவரின் மொபைல் போன் மூலம் என்னுடன் பேசிய என் மகள் சந்தியா, பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பவர் தன்னை மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். அடித்து துன்புறுத்துகின்றனர் என்று கூறினார்.
இதுபற்றி கேட்பதற்காக 18.1.2019 பானுப்பிரியா வீட்டிற்கு சென்றேன். ஆனால் அங்கிருந்தவர்கள் உன்னால் முடிந்ததை செய்துகொள். எங்களிடம் பணம் உள்ளது. எங்களுக்கு செல்வாக்கும் உள்ளது. உன் மகள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம் என்று கூறி என்னை கழுத்தைப் பிடித்து வெளியேற்றிவிட்டனர். எனவே, இந்த விஷயத்தில் போலீசார் தலையிட்டு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo