Onetamil News Logo

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் ;5 பணியாளர்கள் கைது ;கடத்தல்காரர்களுக்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வலைவீச்சு...

Onetamil News
 

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் ;5 பணியாளர்கள் கைது ;கடத்தல்காரர்களுக்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வலைவீச்சு...



தூத்துக்குடி 2018 செப் 12 ;தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் ;5 வேலைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.கடத்தல்காரர்களை  போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் பேருந்து மற்றும் இரயில்கள் மூலம் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது என்ற தகவல் வடபாகம் காவல் நிலையத்திற்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்த நடவடிக்கையில் காவலர்கள் இறங்கினர்.
அதன்படி, காவலர்கள் 2வது கேட் அருகே உள்ள வண்டிமரிசம்மன் கோவில் தெருவில் உள்ள ரைஸ் மில்லில் அதிரடி சோதனை நடத்தி 16 மூடைகளில் தலா ஒரு மூடையில் 50 கிலோ வீதம் 800 கிலோ ரேசன் பச்சரிசி இருப்பதை  கண்டறிந்தனர். ரைஸ் மில்லில் வேலை செய்த  5பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சோதனையின்போது ரைஸ்மில்லில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.  800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு  பின்னர் கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை   பறிமுதல் செய்து ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் இருக்கும்  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார்? என்று வழக்குப்பதிந்து காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். பேருந்து மற்றும் இரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமிராவில் கடத்தல்காரர்கள் குறித்து தகவல் கிடைக்கிறதா? என்று காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo